29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

பச்சை பட்டாணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்,
பச்சைப் பட்டாணி – ஒரு கப்
கொத்தமல்லித் தழை – அரை கட்டு,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – சிறு துண்டு,
நெய் – எண்ணெய் கலவை,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 மணி நேரம் ஊற விடவும்.

* வேகவைத்த பச்சை பட்டாணியுடன் கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து சின்னச் சின்ன உருண்டைகள் தயார் செய்யவும்.

* பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து அதை கிண்ணம் போல் செய்து அதனுள் பட்டாணி விழுது உருண்டையை வைத்து மூடி (வெளியே விழுது வராதபடி) சப்பாத்திகளாக தேய்க்கவும்.

* தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் – எண்ணெய் கலவையை ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

* சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.

* சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தியை அப்படியே சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பலாம்.

Related posts

சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி

nathan

நட்ஸ் டிரைஃப்ரூட்ஸ் ரிச் லட்டு

nathan

சத்தான கோதுமை ஓட்ஸ் ஊத்தப்பம்

nathan

சூப்பரான மக்ரோனி ரெசிபி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட்

nathan

அவல் உசிலி

nathan

அச்சு முறுக்கு

nathan

கார பூந்தி

nathan

தக்காளி பஜ்ஜி

nathan