மருத்துவ குறிப்பு

ஆண் மைக் குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்து, மாத்திரைகள் – ஷாக் ரிப்போர்ட்!!!!

உடல்நலனை அதிகரிக்க உட்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளே ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கிறது என்பது கொஞ்சம் அதிர்ச்சிகரமான விஷயமாக தான் இருக்கிறது. இது ஒருப்பக்கம் இருக்க, மருந்து உட்கொள்வதில் நீங்கள் செய்யும் சில சிறிய தவறுகளும் கூட, ஆண்மை குறைபாடு ஏற்பட பெரிய காரணமாக இருக்கிறது.

இனி, ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்துகள் என்னென்ன மற்றும் அதற்கான கரணங்கள் பற்றி காணலாம்…

மன அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் மன அழுத்தத்தை குறைக்க உட்கொள்ளும் மருந்துகளான ப்ரோசக் (Prozac), சோலோஃட் (Zoloft) போன்றவை மெல்ல உங்கள் ஆண்மையைக் கொல்லும் மருந்துகள் என கூறப்படுகிறது.

நரம்பு மருந்துகள் நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் சில மருந்துகள் இருக்கின்றன. இவை மெதுவாக, நாள்பட ஆண்களின் ஆண்மையை குறைக்க செய்கிறது என கூறப்படுகிறது.

கருத்தடை மாத்திரைகள் அதிகப்படியாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது செக்ஸ் ஹார்மோன்களின் செயல்திறனை குறைத்துவிடுகிறதாம். முக்கியமாக ஆண்களின் டெஸ்டோஸ்டிரோனில் இதன் தாக்கம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது என கூறப்படுகிறது.

விறைப்படைய உட்கொள்ளும் மருந்துகள் ஆண்கள், உடலுறவில் சிறந்து ஈடுபடவும், தங்களது ஆண்குறி விறைப்படையும் உட்கொள்ளும் மருந்துகள், மெல்ல, மெல்ல ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறதாம்.

அலர்ஜிக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் அலர்ஜிக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளில், “Anti- Histamines” கலப்பு இருக்கும் மருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம் அல்லது நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. ஏனெனில், இது உங்கள் இல்லற வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கஞ்சா கஞ்சா எனும் போதை மருந்தை அதிகம் உட்கொள்ளுதல் வலுவாக ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

வலி நிவாரண மாத்திரைகள் சிலர் தங்களது கைப்பைகளில் எப்போதுமே வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருப்பார்கள். வலி ஏற்படுவது போல இருந்தாலே, ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். தினந்தோறும் நீங்கள் வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

இதய நோய் சார்ந்த மருந்துகள் புரப்ரனொலொல் மற்றும் மெட்ரோப்ரோலால் (propranolol and metoprolol) மூலப்பொருள் உள்ள இதய பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் மாத்திரைகள், இதயத்திற்கு நன்மை விளைவிக்கிறது உண்மைதான். ஆனால், இதன் பக்கவிளைவுகள், ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

Related posts

பெண்களே வெளிநாடு செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

nathan

சளியை விரட்டும் துளசி

nathan

ரத்த குழாய் அடைப்பு நீங்க இயற்கையான முறையில் குணம் பெற வழிமுறைகள்

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! கடைவாய்ப்பல் வலிக்கான சில சிறப்பான வீட்டு சிகிச்சைகள்..!

nathan

உங்களுக்கு தெரியுமா கண்களின் நிறத்தை வைத்து உங்கள் ஆரோக்கியத்தை பற்றி அறிவது எப்படி?

nathan

பெண்களுக்கு 30 வயதுக்கு பின் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க வழிகள்

nathan

உங்களுக்கு முப்பது வயசு ஆகபோகுதா? அப்ப இதெல்லா நீங்க கண்டிப்பா மாத்திக்கணும்!!!

nathan

பெண்கள் மார்பக சுய பரிசோதனை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

nathan

இதோ எளிய நிவாரணம்! ஆண்களின் மார்பு பகுதியில் வரும் வலிமிக்க பருக்களைப் போக்கும் எளிய வழிகள்!

nathan