28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
02 1441187809 1
கர்ப்பிணி பெண்களுக்கு

கருவுற்ற பெண்களுக்கு ஏற்பட கூடிய மார்பகம் சார்ந்த பிரச்சனைகள்!!!

பிரசவத்தின் வலியும், அதன் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களும் கருத்தரித்த நாள் முதலே தொடங்கிவிடுகிறது. முக்கியமாக மாதம் அதிகரிக்க அதிகரிக்க உடல் ரீதியாக அவர்கள் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். இம்மாற்றங்களில் மற்றவர் உன்னிப்பாக கவனிக்கும் வகையில் இருப்பது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான்.

கருத்தரித்த பெண்கள் பலருக்கே அவர்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று தெரியாது. மற்றும் நீங்கள் கருத்தரித்து உள்ளீர்கள் என்பதை கூட முன்கூட்டியே உங்களது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்…

மார்பகங்கள் பெரியதாக காணப்படும் நீங்கள் கருத்தரித்துவிட்டால் மாதவிடாய் ஏற்படாது. இந்த காரணத்தால் உங்கள் மார்பகங்கள் பெரியதாகின்றன. எனவே, இதை வைத்தே நீங்கள் கருவுற்று இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துவிடலாம்.

மக்களே உணர்ந்துவிடுவார்கள் இவ்வாறு மார்பகங்கள் திடீரென பெரியதாவதை கண்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் எளிதாக பெண்கள் கருவுற்றுவிட்டார்கள் என்பதை அறிந்துக் கொள்வார்கள்.

புதிய உள்ளாடைகள் வாங்க வேண்டி வரும் மாதாமாதம் வயிறு மட்டுமின்றி, அவரவர் உடல்நிலையை பொறுத்து மார்பகங்களும் பெரியதாகும். இதனால் நீங்கள் கருவுற்றிருக்கும் நாட்களில் இரண்டு, மூன்று முறையாவது உள்ளாடைகள் அளவு மாறுவதால் புதிது வாங்க வேண்டி வரும்.

மார்பக முலைகளும் வளரும் மார்பகங்கள் மட்டுமின்றி, மார்பக முலைகளும் கூட பிரசவ காலத்தில் பெரியதாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நமைச்சல், கூச்சம் கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது மார்பகங்களில் நமைச்சல் மற்றும் கூச்சம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

நீலநிற நரம்புகள் தென்படும் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் மார்பகங்களில் நீலநிற நரம்பிகள் தென்படும் வாய்ப்புகள் இருக்கிறது. இது சாதாரண ஒன்று தான்.

பால் வடிதல் மூன்றாவது மூன்றுகால சுழற்சியில் சில பெண்களுக்கு அவர்களது மார்பகங்களில் பால் வடிதல் ஏற்படும். இதுவும் சாதாரணம் தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொட வேண்டாம் என்ற எண்ணம் கர்பமாக இருக்கும் பெண்கள் இந்த வேளைகளில், தனது துணை மார்பகங்களை தொடுவதை விரும்ப மாட்டார்கள். அசௌகரியமாக உணர்வார்கள்.

02 1441187809 1

Related posts

கர்ப்ப கால நீரிழிவு

nathan

ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்

nathan

மார்பக அளவுகள் தான் தாய்ப்பால் சுரப்பை நிர்ணயிக்குமா?

nathan

குழந்தைப்பேறுக்கு இயற்கை மருத்துவ குறிப்புகள்

nathan

பிரசவத்திற்கு பின் வந்துவிட்டதா ஸ்ட்ரெச் மார்க்? கவலை வேண்டாம்..இதயெல்லாம் ட்ரை பண்ணுங்க

nathan

குங்குமப் பூ பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது…..

sangika

சிசுவின் அசைவுகள்…

nathan

தாய்ப்பாலா, புட்டிப்பாலா… குழந்தை எப்போது கண்டுபிடிக்கும் தெரியுமா?

nathan

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசலாமா?

nathan