31 C
Chennai
Thursday, Jun 27, 2024
201612201527081148 how to make Vegetable Biryani SECVPF
சைவம்

பேச்சிலர் சமையல்: வெஜிடபிள் பிரியாணி

பேச்சிலர் சமையலில் இன்று எளிய முறையில் செய்யக்கூடிய வெஜிடபிள் பிரியாணியை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

பேச்சிலர் சமையல்: வெஜிடபிள் பிரியாணி
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 1 கப்
தேங்காய் பால் – 1/4 கப்
தண்ணீர் – 1 3/4 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கிராம்பு – 2
பட்டை – 1/2 இன்ச்
ஏலக்காய – 1
பிரியாணி இலை – 1

காய்கறிகள்…

கேரட் – 2
பீன்ஸ் – 6
பட்டாணி – 1/4 கப்

அரைப்பதற்கு…

புதினா – 1/4 கப்
கொத்தமல்லி – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2

செய்முறை :

* தக்காளி, பீன், கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

* அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிய பிறகு அத்துடன் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட், தயிர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.

* அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் அதில் அரிசியை கழுவி போட்டு சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

* இறுதியில் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து, ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

* விசில் போனதும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி பரிமாறினால், வெஜிடபிள் பிரியாணி ரெடி. 201612201527081148 how to make Vegetable Biryani SECVPF

Related posts

சூப்பரான பாலக் வெஜிடபிள் கிரேவி

nathan

குஜராத்தி கதி கிரேவி

nathan

கறிவேப்பிலை மிளகு குழம்பு

nathan

புளியோதரை

nathan

காராமணிப் பொரியல் செய்வது எப்படி

nathan

எலுமிச்சை சாதம்

nathan

காளான் பிரியாணி

nathan

பன்னீர் பட்டாணி மசாலா

nathan

பத்திய சமையல் / கூரவு தோசை / கார சட்னி / புளி இல்லா கறி!

nathan