31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
பழரச வகைகள்

வியட்நாம் கீர்

என்னென்ன தேவை?

ஜவ்வரிசி – 1/2 கப்,
பாசிப் பருப்பு – 1/4 கப்,
வாழைப்பழம் – 2,
வெல்லத் துருவல் – 1/2 கப்,
வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்,
வறுத்த எள் – 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் – 1 கப்,
பூசணி விதை – 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை 3, 4 மணி நேரம் நீரில் ஊற விட்டு வேக வைத்து நீரை வடிக்கவும். வாழைப்பழத்தை 10 நிமிடம் ஆவியில் வேக விட்டு சிறு துண்டாக நறுக்கவும். பாசிப்பருப்பை வேக விடவும். வெல்லப்பாகு காய்ச்சி, வெந்த பருப்பில் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும். அடுத்து தேங்காய்ப்பாலில் 1 கொதி விட்டு இறக்கவும். ஒரு பவுலில் முதலில் வாழைப்பழத்துண்டு போட்டு, அதன் மீது ஜவ்வரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்ல கலவை பிறகு தேங்காய்ப் பால் ஊற்றி பொடித்த வேர்க்கடலை, வறுத்த எள், வறுத்த பூசணி விதை தூவிப் பரிமாறவும்.

Related posts

பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படி

nathan

ஆப்பிள் – திராட்சை லஸ்ஸி

nathan

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்

nathan

ஆச்சரியமான மாம்பழ ஸ்மூத்தீ

nathan

வெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்

nathan

ஃபலூடா

nathan

பாசுந்தி செய்வது எவ்வாறு….

nathan

டிராகன் ஃபுரூட் ஜூஸ்

nathan

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி

nathan