தினமும் குறைந்து ஆறேழு முறை சிறுநீர் கழிக்கும் நாம், அதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என சில இருப்பதை கவனிப்பதே இல்லை என்பது தான் உண்மை. சிறுநீர் என்பது நமது உடலில் சேரும் நீர் உணவுகளில் இருந்து சுத்தம் செய்யப்பட்ட பிறகு, கழிவாக வெளிவரும் ஒன்று என்பது மட்டுமே நம்மில் பெரும்பாலானோர் அறிந்தது.
ஆனால், இதை தாண்டி சிறுநீர் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை முக்கியமான விஷயங்கள் சிலவன இருக்கின்றன….
சிறுநீர் நீர்ப்பை அளவு நமது சிறுநீர் நீர்ப்பையில் அதிகபட்சம் ஒவ்வொரு இரண்டு மணிநேர இடைவேளையிலும், இரண்டு கப் நீர் வரை சேமிக்க முடியும். இது நீங்கள் உட்கொள்ளும் நீரின் அளவை பொருத்தது.
சிறுநீரின் நாற்றம் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அமோனியம் நாற்றம் வந்தால், உங்கள் உடலின் நீரின் அளவு குறைவாக இருக்கிறது என அர்த்தம். இதுவே, கெட்ட நாத்தம் அடித்தால், உங்கள் சிறுநீர்ப்பையில் ஏதோ தொற்று ஏற்பட்டுள்ளது என அர்த்தமாகும். கல்லீரலில் தொற்று ஏற்பட்டால் கூட, இவ்வாறான கெட்ட நாற்றம் ஏற்படும் என கூறுகிறார்கள்.
ஆறு லிட்டர் சாதாரணமாக நல்ல நலத்துடன் இருக்கும் ஓர் நபருக்கு அதிகபட்சமாக ஆறு லிட்டர் வரை சிறுநீர் ஓர் நாளுக்கு வெளிப்படும் என கூறப்படுகிறது.
3-5 மணிநேரம் நீங்கள் உட்க்கொளும் நீரின் அளவை பொறுத்து, மூன்றில் இருந்து ஐந்து மணி நேரம் வரை உங்கள் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேகரித்து வைத்துக்கொள்ள முடியும்.
மூளைக்கு செல்லும் சிக்னல் ஒவ்வொரு முறையும் உங்கள் சிறுநீர்ப்பை நிரம்பும் போதும், உங்கள மூளைக்கு ஓர் சிக்னல் போகும். அதனால் தான் நீங்கள் சிறுநீர் கழிக்க செல்கிறீர்கள்.
6-8 முறை உங்களது நலன் சரியாக இருந்தால் ஒரு நாளுக்கு ஆறில் இருந்து எட்டு முறை நீங்கள் சிறுநீர் கழிக்க செல்வீர்கள். இது நீங்கள் உட்கொள்ளும் நீரின் அளவை பொருத்து மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீரில் இருக்கும் முக்கிய அங்கங்கள் சிறுநீரின் முக்கிய அங்கங்களாக இருப்பவை, கிரியேட்டின், யூரிக் அமிலம் மற்றும் இரத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கழிவுகள்.
வயதான பிறகு உங்களுக்கு வயதான பிறகு, நீங்களாக சிறுநீர் கழிக்க செல்ல வேண்டியது அவசியம் என்று கூறுகிறார்கள். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன், மற்றும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவில் குறைவு ஏற்படுவதால், இது அவசியம் என கூறப்படுகிறது.