பரிமாறும் அளவு – 2 நபருக்கு
தேவையான பொருள்கள் –
- சிக்கன் – 1/4 கிலோ
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- தயிர் – 50 கிராம்
- லெமன் ஜூஸ் – 2 மேஜைக்கரண்டி
- சிக்கன் 65 பவுடர் – 1 மேஜைக்கரண்டி
- மல்லித் தழை – சிறிது
- எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை –
- முதலில் சிக்கனை நன்கு கழுவி வைக்கவும். கழுவிய சிக்கன் மீது இஞ்சி பூண்டு விழுது , தயிர், லெமன் ஜூஸ், சிக்கன் 65 பவுடர், உப்பு எல்லாவற்றையும் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போடவும்.
- அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சிக்கன் வேகும் வரை கிளறி விடவும். சிக்கன் வேகும் போது தண்ணிர் விடும்.
- சிக்கன் வெந்து தண்ணிர் நன்றாக வற்றிய பிறகு அடுப்பை சிறிது கூட்டிகொள்ளவும்.
- இரு புறமும் நன்றாக சிவக்கும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.
- மல்லித் தழையை தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் ப்ரை ரெடி.