27.1 C
Chennai
Saturday, May 24, 2025
201612171309544754 ragi mint dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான புதினா – கேழ்வரகு தோசை

தினமும் கேழ்வரகு சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது புதினா சேர்த்து கேழ்வரகு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான புதினா – கேழ்வரகு தோசை
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
ரவை – 3 டேபிள் ஸ்பூன்
புதினா – 3/4 கப்
பச்சை மிளகாய் – 2
துருவிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு, நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

* புதினா, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் முதலியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ரவை, உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவை விட சிறிது அதிகமாக தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

* இதனுடன் நறுக்கிய புதினா, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், இஞ்சி முதலியவற்றை சேர்த்து, சீரகத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கி கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

* சத்தான புதினா – கேழ்வரகு தோசை ரெடி.201612171309544754 ragi mint dosa SECVPF

Related posts

பால் அப்பம்

nathan

பட்டாணி பூரி

nathan

பாசிப்பருப்பு கடையல்

nathan

சூப்பரான பெங்காலி ஸ்பெஷல்: பட்டர் ஃபிஷ் ஃப்ரை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி

nathan

கேரட் கொத்து சப்பாத்தி

nathan

முட்டை சென்னா

nathan

சுவையான மீன் கட்லெட் செய்வது எப்படி ?

nathan

பாகற்காய் பச்சடி

nathan