என்னென்ன தேவை?
சேனைக்கிழங்கு -500 கிராம்
சின்ன வெங்காயம் -10
சிவப்பு மிளகாய் -5
துருவிய தேங்காய் -1/4 கப்
புளி கரைசல் -1/4 கப்
எலுமிச்சை சாறு -2ஸ்பூன்
பட்டை -2
கிராம்பு -4
மல்லி -2ஸ்பூன்
சோம்பு -1/4ஸ்பூன்
கடுகு -1/4 ஸ்பூன்
உளுந்து -1/2ஸ்பூன்
சீரகம் -1/2ஸ்பூன்
கடலைப்பருப்பு -1 ஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
உப்பு
எண்ணெய் -தேவையான அளவு
எப்படி செய்வது?
சேனைக்கிழங்கை சிறிய அளவில் நறுக்கி லைட்டாக வேகவைத்து தண்ணீர் வடிகட்டி அதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, சிவப்பு மிளகாய், மல்லி, சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வறுக்கவும். நிறம் மாறியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியதும் மிக்ஸரில் போட்டுஅரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறி பொரித்துவைத்துள்ள சேனைக்கிழங்கை போட்டு கிளறி 2 நிமிடம் ஆனதும் கொத்தமல்லி இழையை தூவி எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு இறக்கி பரிமாறலாம்.