27.1 C
Chennai
Saturday, May 24, 2025
bachelor sambar 07 1460014007
சைவம்

பேச்சுலர் சாம்பார்

இதுவரை நீங்கள் பருப்பு சேர்த்து தான் சாம்பார் செய்திருப்பீர்கள். ஆனால் பருப்பு சேர்க்காமல் சாம்பார் செய்து சுவைத்ததுண்டா? ஆம், பருப்பு சேர்க்காமல் கூட சாம்பார் செய்யலாம். இதனை பேச்சுலர் சாம்பார் என்று சொல்லலாம். இம்மாதிரியான சாம்பார் வீட்டில் பருப்பு தீர்ந்துவிட்டால் வைக்க உதவும்.

மேலும் இது பேச்சுலர்களுக்கு ஏற்ற ஓர் அற்புதமான ரெசிபி. சரி, இப்போது அந்த பேச்சுலர் சாம்பரை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை கறிவேப்பிலை – சிறிது வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய – 1 (நீளமாக கீறியது) தக்காளி – 2 (நறுக்கியது) சாம்பார் பவுடர் – 2-3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சர்க்கரை – 1/2 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, சாம்பார் பொடி சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறினால், பேச்சுலர் சாம்பார் ரெடி!!!

bachelor sambar 07 1460014007

Related posts

ஆலு பலாக் ரைஸ்

nathan

30 வகை பிரியாணி

nathan

சேப்பங்கிழங்கு ப்ரை

nathan

அசத்தலான சுவையில் இஞ்சி குழம்பு

nathan

முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி

nathan

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

முருங்கை பூ பொரியல்

nathan

மஷ்ரூம் ரைஸ்

nathan

கறிவேப்பிலை குழம்பு

nathan