32 C
Chennai
Saturday, Jul 19, 2025
spoon1 27 1469596953
இளமையாக இருக்க

தொடர்ந்து 10 நாட்கள் ஸ்பூன் மசாஜ் செய்தால் இளமையை மீட்கலாம் !!

மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து சுருக்கங்கள் வராமல் தடுக்கும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். திலும் ஸ்பூன் மசாஜ் செய்திருக்கிறீர்களா? இது சுருக்கங்களை நீக்கிவிடும்.
ஸ்பூன் மசாஜினால் எண்ணெய் எளிதில் சருமத்தால் உறிஞ்சப்படும். ஸ்பூனால் கீழிருந்து மேல் நோக்கி முகத்தில் மசாஜ் செய்தால், தொங்கும் தசைகள் இறுகும்.

கண்களுக்கு அடியில் தங்கும் சதைப்பை மறையும். சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டம் அதிகரித்து இளமையை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து பத்து நாட்கள் ஸ்பூன் மசாஜ் செய்து பாருங்கள்.

தேவையானவை : ஸ்பூன் – 1 ஐஸ் கட்டி – சில நீர் – 1 கப் ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் – சிறிய கப்

முகத்திற்கு மசாஜ் செய்ய : முதலில் முகத்தை நன்றாக கழுவி, பருத்தி துணியால் ஒத்தி எடுங்கள். வெதுவெதுப்பான ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயில் 1 நிமிடம் ஸ்பூனை வையுங்கள்.

பின்னர் அதனை எடுத்து ஸ்பூனில் பின்பகுதியினால் நாடியிலிருந்து மேல் நோக்கி, கன்னம் வரை மெதுவாக மசாஜ் செய்ய்யவும். ஸ்பூன் ஆறிப்போனால், மீண்டும் எண்ணெயில் ஸ்பூனை விட்டு மீண்டும் செய்யவும்.

அதுபோல், இரு கன்னப்பகுதியில் கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யவும். அதன்பின்னர் நெற்றியில் வட்ட வடிவில் நெற்றி முழுவதும் மசாஜ் செய்யுங்கள். இவாறு 10 நிமிடம் மசாஜ் செய்தால் போதும். தினமும் இப்படி செய்யுங்கள்.

கண்களுக்கு அடியில் உண்டாகும் சதைப்பையை போக்க : சுத்தமான நீரில் சில ஐஸ் துண்டுகளைப் போட்டு அதில் ஸ்பூநை வைகவும். நன்றாக சில்லிட்டதும் அதனை கண்களுக்கு அடியில் வையுங்கள். லேசாக அழுத்தவும்.

ஸ்பூன் வெதுவெதுப்பாக ஆகிவிட்டால் திரும்பவும் ஐஸ் நீருக்கள் ஸ்பூனை மூழ்கி, கண்களுக்கடியில் வையுங்கள். சில நிமிடங்கள் போதும். இதுபோல் கண்களின் சதைப்பை போகும் வரை தினமும் செய்யுங்கள்.

spoon1 27 1469596953

Related posts

பெண்களின் முன்னழகை அழகாக்கும் இயற்கை வழிகள்

nathan

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான‌ 10 மிக முக்கியமான வைட்டமின்கள்,beauty tips only tamil,tamil beauty tips in tamil

nathan

தினமும் மதியம் குட்டித் தூக்கம் போட்டா… உங்க அழகை அதிகரிக்கலாம்!

nathan

பெண்கள் ‘ஸ்லிம்’ அழகு பெற ஆசைப்பட்டால்…

nathan

என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள, இதப்படிங்க!

nathan

இளமை மாறாம சருமம் பளபளப்பாக இருக்கனுமா? இதையெல்லாம் அடிக்கடி சாப்பிடுங்க!!

nathan

நீங்க நீண்ட நாள் இளமையா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அதிகம் சாப்பிடுங்க…

nathan

நாற்பதைத் தொடுகிறீர்களா?

nathan

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்கனுமா? இந்த ஒரு வழியை ட்ரை பண்ணுங்க

nathan