29.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
201612011303060739 oats dal pongal SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் உணவு சிறந்தது. ஓட்ஸை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்
தேவையானப் பொருள்கள் :

ஓட்ஸ் – 2 கப்
பச்சைப் பருப்பு – 3/4 கப்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

நெய் – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் 1 – டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை – கொஞ்சம்

செய்முறை :

* முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக் கொள்ளவும்.

* மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்து கொள்ளவும்.

* இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

* பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் ஒரு பங்கு ஓட்ஸூக்கு இரண்டரை பங்கு தண்ணீர் என 5 கப் தண்ணீர் ஊற்றி கொதி நிலை வரும் வரை மூடி வைக்கவும்.

* கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டு, தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.

* இரண்டும் நன்றாகக் குழைந்து, வேகும் வரை மிதமானத் தீயில் வைத்திருக்கவும்.

* ஒரு வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்தவும்.

* அதில் ஒன்றிரண்டாகப் பொடித்து மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.

* அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் சேர்த்து கிளறி இறக்கவும். இந்த முறையில் செய்யும்பொழுது மிகவும் நன்றாக இருக்கும்.

* இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் இவை மிகப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு: சாதாரண பொங்கல் போல் அல்லாமல் ஓட்ஸ் பொங்கல் செய்யும்போது பச்சைப் பருப்பின் அளவைக் கொஞ்சம் கூட்டி செய்தால்தான் நன்றாக இருக்கும்.201612011303060739 oats dal pongal SECVPF

Related posts

சுவையான உருளைக்கிழங்கு வடை

nathan

சூப்பரான டிபன் பாஜ்ரா பூரி

nathan

ரஸ்க் லட்டு

nathan

கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்வது எப்படி

nathan

முள்ளங்கி ஸ்பெஷல் உருண்டை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பேபிகார்ன்

nathan

ரவை கொழுக்கட்டை

nathan

சுவையான குடைமிளகாய் சாண்ட்விச்

nathan

உப்புமா

nathan