ஷாப்பிங் சென்றால் அதிக நேரம் செலவிடுவது பெண்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அதற்கான காரணத்தை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.
பெண்கள் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவிட என்ன காரணம்
தீபாவளி, பொங்கல் பண்டிகை என்று எடுத்துக்கொண்டாலே, ஆண்களை விட பெண்களுக்குதான் கலக்கல் டிசைன்கள், கலர்புல் ஆடைகள் கடைகளில் விற்கப்படுகின்றன.
ஆண்களுக்கு ஒரு பேண்ட், ஷேர்ட், பட்டி வேஷ்டி சட்டை, குர்தா, கோட் ஷீட் ஆகியவற்றையே புதிய டிசைன்களில் அறிமுகப்படுத்துவார்கள்.
ஆனால் பெண்களுக்கு அப்படியா….சுடிதார், காட்டன் சாரிஸ், லெஹங்கா, பட்டியாலா, பட்டுப்புடவைகள் என அடுக்கிகொண்டே போகலாம்.
அழகான ஆடைகளை அணிவதற்காகவே பிறந்தவர்கள் பெண்கள், என்னதான் ஒரு ஆண் 1000 ரூபாய் கொடுத்து பேண்ட் டி ஷர்ட் வாங்கி அணிந்துகொண்டாலும், அதையே ஒரு பெண் 200 ரூபாய் கொடுத்து ஒரு குர்திஷ் வாங்கி அணிந்துகொண்டாலும் அழகாக தெரிவது பெண்கள்தான்.
இந்த அழகிய ஆடைகளை வாங்குவதற்காக கடைக்கு சென்றால், அதிக நேரம் செலவாகத்தான் செய்யும். ஆனால் இதனை புரிந்துகொள்ளாமல் வீட்டிலிருக்கும் ஆண்கள், பெண்கள் ஷாப்பிங் போகிறோம் கூட வருகிறீர்களா? என கேட்டால் தலை தெறிக்க ஓடுவார்கள்.
இதில், அடுத்ததாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தரம், விலை பார்த்து வாங்குவதில் ஆண்களை விட பெண்களே கைதேர்ந்தவர்கள்.
ஒரு ஆண் கடைக்கு சென்றால், தனக்கு பிடித்த கலர் மற்றும் பார்ப்பதற்கு துணி நன்றாக இருக்கிறதா என பார்த்துவிட்டு எடுத்துவந்துவிடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படியில்லை, அந்த துணியின் தரம் என்ன? அந்த தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? அந்த துணி நமக்கு பொருத்தமாக இருக்குமா? எத்தனை மாதம் அல்லது எத்தனை வருடத்திற்கு உழைக்கும்? என அனைத்து கேள்விகளுக்கும் கடை ஊழியர்களிடம் இருந்து விடை அறிந்துகொண்ட பின்னரே, அதனை எடுப்பார்கள்.
ஒரு பெண் ஷாப்பிங் செய்ய போனால், வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான மற்றும் தேவையான பொருட்களை தரத்துடன் வாங்கிவருவார்கள். இவ்வாறு தனக்காக ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும் சரி, தனது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும் சரி, நல்ல தரத்துடன் வாங்க விரும்புவதால் தான் அவர்கள் ஷாப்பிங் சென்றால் தாமதமாகிறது.
ஆனால், பெண்களை திருப்திபடுத்த முடியாது, அதனால் தான் அவர்கள் பல்வேறு கடைகளில் ஏறி இறங்குகிறார்கள் என் தவறான கருத்தே முன்வைக்கப்படுகிறது.