32.6 C
Chennai
Friday, Jul 18, 2025
curry leaves chicken 19 1458367590
அசைவ வகைகள்

கறிவேப்பிலை சிக்கன்

விடுமுறை நாட்களில் வித்தியாசமாக ஏதேனும் சமைத்து சாப்பிட தோன்றும். அதிலும் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் போன்றவற்றை தான் செய்து சாப்பிட விரும்புவோம். உங்களுக்கும் அப்படி தோன்றினால், இந்த வாரம் கறிவேப்பிலை சிக்கன் செய்து சுவையுங்கள்.

இது நிச்சயம் உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும். சரி, இப்போது அந்த கறிவேப்பிலை சிக்கனை எப்படி சமைப்பதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: சிக்கன் – 250 கிராம் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு கறிவேப்பிலை – 1 கட்டு பச்சை மிளகாய் – 4 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்) எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

ஊற வைப்பதற்கு… மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி 6 மணிநேரம் ஃப்ட்ரிட்ஸில் வைத்து ஊற வைக்கவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து பேப்பர் டவலில் வைத்துக் கொள்ளவும். பின்பு அதே எண்ணெயில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை மொறுமொறுவென்று பொரித்து, பேப்பர் டவலில் வைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாயை தனியாக பிரித்து வைத்து, கறிவேப்பிலையை மட்டும் கையால் நொறுக்கி விட வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகள், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, அதோடு சிறிது மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு பிரட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், கறிவேப்பிலை சிக்கன் ரெடி!!!
curry leaves chicken 19 1458367590

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ்

nathan

முட்டை ப்ரைடு ரைஸ் – எளிய முறையில் செய்வது எப்படி

nathan

இறால் குழம்பு செய்வது எப்படி?

nathan

சிக்கன் லாலிபாப் / Chicken Lollipop

nathan

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட்

nathan

நாட்டுக்கோழி வறுவல் செய்ய வேண்டுமா?…

nathan

அரைக்கீரை கொத்துக்கறி மசாலா

nathan

சிக்கன் லெக் பீஸ் வறுவல் | Leg Piece Chicken Fry

nathan

சுவையான கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்

nathan