30.1 C
Chennai
Wednesday, Jul 3, 2024
cucumber dal 14 1457941423
சைவம்

வெள்ளரிக்காய் தால்

தற்போது வெயில் கொளுத்துகிறது. ஆங்காங்கே வெள்ளரிக்காயும் விற்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு வெள்ளரிக்காய் பிடிக்குமானால், அதனை அப்படியே பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக, மதிய வேளையில் சாதத்தோடு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தால் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

இங்கு வெள்ளரிக்காய் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 துவரம் பருப்பு – 100 கிராம் வெங்காயம் – 1 (நறுக்கியது) பூண்டு – 4 (நறுக்கியது) வரமிளகாய் – 2 பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை புளிச்சாறு – சிறிது

செய்முறை: முதலில் துவரம் பருப்பை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெள்ளரிக்காயை தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். அடுத்து அதில் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து சிறிது வதக்கி, தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும். வெள்ளரிக்காய் ஓராளவு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அதோடு வெண்ணெயையும் சேர்த்து கிளறி, சிறிது புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் வெள்ளரிக்காய் தால் ரெடி!!!

cucumber dal 14 1457941423

Related posts

வெண்டைக்காய் அவியல்

nathan

சுவையான ஐந்து இலை குழம்பு !

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு மோர்க்கூழ்

nathan

சுவையான காளான் டிக்கா

nathan

சுவையான கேரட் பொரியல்

nathan

பஞ்சாப் உருளைக்கிழங்கு

nathan

பாஸ்தா பிரியாணி

nathan

புத்தம் புது ‘பூ’ – தாமரைப் பூ கூட்டு

nathan

தக்காளி பிரியாணி

nathan