26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
201611241335003566 Signs of the change is necessary to
உடல் பயிற்சி

உடற்பயிற்சியில் மாற்றம் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

நீங்கள் பயிற்சிக்குப் பின்னர் மிகவும் தளர்ந்து போகும் நிலையை உணர்ந்தால் நீங்கள் குறைந்த தீவிரமுள்ள பயிற்சிகளை செய்ய வேண்டும்.

உடற்பயிற்சியில் மாற்றம் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்
எளிய உடற்பயிற்சிகள் வயிற்றுக் கொழுப்பை கரைக்க உதவுகிறது. தினசரி உடற்பயிற்சி செய்வதால் உடலை கட்டுடன் வைத்துக் கொள்ள முடிகிறது. வசீகர தோற்றத்தை பெற முடிகிறது. சில சமயங்களில் ஒரே மாதிரியான உடற்பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்து வருவது உங்களுடைய குறிக்கோளை வீணடித்து விடும். இது போன்ற சூழல்கள் ஏற்படும் நேரங்கள் தான் உடற்பயிற்சிகளில் மாற்றம் செய்ய வேண்டிய நேரங்களாக இருக்கின்றன.

நீங்கள் உடற்பயிற்சிகளை செய்யத் துவங்குகிறீர்கள். சில நாட்களிலேயே பலன்களை பெற தொடங்குகிறீர்கள். சில மாதங்களுக்குப் பின்னர், நீங்கள் ஒரு சமதளமான அல்லது முன்னேற்றமில்லாத இடத்தில் இருப்பதை உணருவீர்கள். இந்த நேரங்களில் நல்ல பலன்களைப் பெற, எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் மீண்டும் செய்தல், மற்றும் செய்யும் வேகத்தை அதிகரித்தல் போன்றவை உதவும்.

ஒரே வரிசையில் ஒரே மாதிரியான பயிற்சிகளை திரும்பத் திரும்பச் செய்வதால் பயிற்சியின் மீதான உங்களுடைய ஊக்கம் குறைந்து கொண்டு வரும்.. ஆகவே உங்களிடம் பலவகையான பயிற்சிகள் இருப்பதை உறுதி செய்தால் உங்களுக்கு வேண்டிய ஊக்கம் குறையவே குறையாது.

நீங்கள் ஜிம்மில் இருந்து வந்த பின்னர், மூட்டுகளில் வலி ஏற்பட்டால் நீங்கள் சரியான வகையில் பயிற்சியை தொடங்கவில்லை அல்லது செய்யவில்லை அல்லது முடிக்கவில்லை எனலாம். இது போன்ற நேரங்களில் இலேசான கார்டியோவை சாதாரணமாகச் செய்து விட்டு, வலிமையான பயிற்சியை அல்லது பிற முன்னேறிய பயிற்சிகளை செய்யலாம்.

ஒரே மாதிரியான பயிற்சிகளை திரும்ப திரும்ப செய்வதால் உங்களுடைய உடல் பகுதிகளுக்கு அதிகமாக பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் நீங்கள் சற்று தளர்வடைய ஆரம்பித்திருப்பீர்கள். எனவே உங்களுடைய பயிற்சியை நன்றாக திட்டமிடுங்கள். மேலும் இடையிடையே ஓய்வு கொடுப்பதன் மூலம் தசைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதையும் உறுதி செய்யுங்கள்.

உங்களுடைய வரையறையை நீங்கள் அதிகரிக்காமல் இருந்தால், உங்களால் ஃபிட்னஸ் அளவைப் பராமரிக்க முடியும். ஆனால் உச்ச நிலைக்கு செல்ல முடியாது. HIIT மற்றும் கிராஸ்ஃபிட் போன்ற சவால் விடக் கூடிய பயிற்சிகளை நீங்கள் முயற்சிப்பதன் மூலம் நீங்கள் இந்த உச்ச நிலைக்குச் செல்ல முடியும்.

உங்களது பயிற்சியினால் நீங்கள் சோர்வடைந்து இருப்பீர்கள். ஆனால் அது உங்களுடைய முழு சக்தியையும் வடிகட்டி இருக்காது. எனவே நீங்கள் பயிற்சிக்குப் பின்னர் மிகவும் தளர்ந்து போகும் நிலையை உணர்ந்தால் நீங்கள் குறைந்த தீவிரமுள்ள பயிற்சிகளை செய்ய வேண்டும். பயிற்சிகளுக்கு இடையில் நன்கு ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் நன்றாக சாப்பிட வேண்டும் என்று சொல்லும் அறிகுறியாகும்.201611241335003566 Signs of the change is necessary to

Related posts

ஏரோபிக்ஸ் பயிற்சியின் போது கவனம் தேவை

nathan

உடற்பயிற்சி செய்யும் போது தண்ணீர் அருந்தலாமா?

nathan

அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? கட்டாயம் இத படிங்க!….

sangika

கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் அருந்த வேண்டிய பானம்

nathan

மூச்சுப் பயிற்சிகள்

nathan

நீங்கள் செய்யும் உடற்பயிற்சியில் மாற்றம் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

உயர் ரத்த அழுத்தம், இருதய பக்க கோளாறுகள், தூக்கமின்மைக்கு பயனுள்ள பயிற்சி யோக நித்திரை

sangika

கலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா? சைக்கிள் பயிற்சியா?

nathan

சர்வாங்காசனம்

nathan