27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
teeth1 11 1468215133
மருத்துவ குறிப்பு

மஞ்சள் பற்களை எப்படி பளீர் பற்களாக மாற்றுவது?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். குறிப்பாக நம் சிரிப்பில் தெரியும். கள்ளங்கபடமில்லாமல் சிரித்தால் யாருக்குதான் உங்களை பிடிக்காது.

அழகான பல்வரிசை மட்டும் இருந்தால் போதாது. அதை ஒழுங்காக பராமரித்தால்தான் அழகும் ஆரோக்கியமும் நிலைத்து நிற்கும். இல்லையெனில் மஞ்சள் கறையோடு, துர் நாற்றம் ஏற்பட்டால், யாரும் நம் அருகில் வர யோசிப்பார்கள்.

நாம் சாப்பிடும் உணவு மஞ்சள் கறையை ஏற்படுத்தும். சிலருக்கு பல் விளக்கினாலும் போகாமல் இருக்கும். சிரிப்பதற்கே யோசிப்பார்கள். இதற்கு பல் மருத்துவரிடம் சென்றாலும் , ப்ளீச்சிங் செய்வதால், பற்களின் எனாமல் போவதோடு மட்டுமல்லாமல், பல் கூச்சமும் வந்துவிடும்.

ஆகவே எப்படி பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்குவது என யோசியுங்கள். இங்கே குறிப்பிட்டுள்ள சில குறிப்புகளை பயன்படுத்தினால் உங்கள் பற்கள் வெண்மையாக மாறுவதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சிட்ரஸ் பானங்கள் : காபி தேநீர் அதிகம் குடிப்பதை நிறுத்துங்கள். கோலா போன்ற கார்பனேட்டட் பானங்களும் பற்களில் கறையை ஏற்படுத்தும். அதிகமாக அமிலத்தன்மை உள்ள பானங்கள் பற்களில் எனாமலை போகச் செய்யும். கறைகளையும் கொடுத்துவிடும்.

ஆகவே கூடியமானவரை இவற்றை அதிகம் பற்களில் படாமல் பார்த்துக் கொண்டால், பற்களில் கறை ஏற்படாது. சிட்ரஸ் பானங்களை ஸ்ட்ரா வைத்து குடிப்பது பற்களுக்கு நல்லது.

வெளிர் நிறமுள்ள இனிப்பு வகைகள் : கேரமல் இனிப்பு வகைகள், சாக்லெட் , ஆரஞ்சு, பச்சை மஞ்சள் போன்ற வெளிர் நிறமுள்ள கேண்டி வகைகள், ஆகியவை வேகமாக பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். இதனால் வேகமாக கிருமிகள் மற்றும் மிட்டாய்களின் நிறங்கள் பற்களில் தங்கி, கறையை உண்டாகும். இவை பற்களின் அழகை பாதிப்பது போல அமையும்.

அடர் பிரவுன் உள்ள சாக்லேட்டுகள் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும். ஆகவே அவைகளை உண்ணலாம். கார உணவுகள் சாப்பிடுவதால், எச்சில் அதிகமாக சுரக்கப்படும். இவை கிருமிகளை பற்களிலிருந்து வெளியேற்றிவிடும்.

தினமும் இரு வேளை பல்விளக்குதல் : இது உங்களுக்கு தெரியாதது இல்லை. தினமும் இருவேளை பல்விளக்க வேண்டும் என்று எத்தனையோ மருத்துவர்கள் கூற கேட்டிருப்பீர்கள். நாம் சாப்பிடும் எத்தனையோ உணவுகள் பற்களில் தங்கியிருக்கும்.

அவற்றை அவ்வப்போது நீக்காவிட்டால் மெல்ல மெல்ல கறைகளை ஏற்படுத்தும். பின்னர் நிரந்தரமாக விடாப்பிடியான கறைகளை உண்டாக்கும். ஆகவே பற்களை இரு வேளைகள் விளக்குவது பற்சிதைவை மட்டுமல்ல கறைகள் உண்டாவதையும் தடுக்கும்.

சோடா உப்பு : மஞ்சள் கறையை எப்படிதான் போக்குவது எனக் கேட்டால் மிக எளிய வழி சோடா உப்பு. பல் விளக்கும்போது பேஸ்ட்டை பிரஷ்ஷில் போட்டவுடன், அதன் மேல், ஒரு சிட்டிகை சோடா உப்பை பேஸ்ட்டின் மீது தூவி, பல் விளக்குங்கள்.

இதனை தினமும் செய்யக் கூடாது. ஏனெனில், இது பற்சிதைவை உண்டாக்கிவிடும். ஆகவே வாரம் ஒரு நாள் மட்டும் உபயோகியுங்கள். தினமும் வேண்டாம். நாளடைவில் பற்கள் வெண்மையாகிவிடும்.

teeth1 11 1468215133

Related posts

மருத்துவர் கூறும் தகவல்கள்! இரைப்பை குடல் பாதையில் ஏற்படும் பிரச்சினைகளால் தொந்தரவா?

nathan

பாகற்காய் சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்

nathan

தெரிந்துகொள்ளுங்கள் ! ஏலக்காயில் அடங்கியிருக்கும் நன்மைகள் இவ்வளவா?..

nathan

தெரிஞ்சிக்கங்க…இரத்த அழுத்தத்தைக் கொண்டு, பிறக்கும் குழந்தை ஆணா, பெணா என்பதை அறியலாம் தெரியுமா?

nathan

பெண்கள் அதிக நேரம் டி.வி. பார்ப்பது ஆபத்து

nathan

நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க சில அற்புதமான வழிகள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? கார்டியாக் அரஸ்ட் ஏற்படுவதற்கு முன்னால் தெரியும் அறிகுறிகள்!

nathan

கை கால் எரிவுக்கான -சித்த மருந்துகள்

nathan

கணுக்கால் வலி வரக்காரணமும் – தீர்வும்

nathan