மழைக்காலம் நம் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான பருவம் ஆகும். சில வகையான உணவுகளை நாம் இந்த பருவத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. இந்த வானிலையின் போது நாம் சில உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். இங்கு ஆரோக்கியமான பருவ மழையைக் கொள்ள உங்களுக்கு உதவும் வகையில் நிபுணர்களால் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:
அந்த குறிப்புகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அவற்றைத் தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம், மழைக்காலத்தில் நோயின் தாக்கத்தில் இருந்துவிடுபட்டு, மழைக்காலத்தை சந்தோஷமாக கழிக்கலாம்.
மிகுதியான உணவைத் தவிருங்கள் மிகுதியான உணவை (நன்கு வறுத்த உணவுகள், அதிகமாக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், ஜங்க் உணவு) மற்றும் அமில தன்மை கொண்ட புளிப்பு சுவை கொண்ட உணவுகள், மற்றும் காரமான ( ஊறுகாய் மற்றும் சட்னி, தயிர்) உணவுகளைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் உப்பு அதிகம் கொண்ட உணவுகள் அஜீரணம், அமில மிகைப்பு மற்றும் வீக்கம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
உங்கள் காலடிகளை பாதுகாக்கவும் மழைக் காலங்களில் பாதங்கள் அடிக்கடி நனைவதற்கான வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது விழுந்து விடாமல் இருக்க, நல்ல பிடி கொண்ட காலணிகளைப் பயன்படுத்தவும். எப்போதும் நகங்களை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்ளவும்.
எளிதான மற்றும் செரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் இவை மந்தமான மற்றும் பலவீனமான செரிமான அமைப்பிற்கு உதவும். வேக வைத்த அல்லது சமைத்த பூசணி போன்ற காய்கறிகள், சாலட்கள், பழங்கள், பாசிப்பருப்பு, சோளம் போன்றவை உங்கள் செரிமான அமைப்பிற்கு ஏற்ற உணவுகளாகும்.
நல்ல செரிமானத்திற்கு இவற்றைக் குடிக்கவும் இங்கு உள்ள ஆயுர்வேத பானம் உங்கள் செரிமானத்திற்கு உதவுகிறது: சூடான தண்ணீரில் மிளகு, இஞ்சி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து,ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.
பச்சை காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும் பச்சை இலை காய்கறிகள் தரையில் நெருங்கி வளர்வதால் அழுக்கு மற்றும் ஈரப்பதத்தை நிறைய ஈர்க்கின்றன. தவிர இவை ஜீரணிக்க கடுமையாக இருக்கும் மற்றும் பருவமழை காலங்களில் சுத்தம் செய்யவும் கடுமையாக இருக்கும்.
சமையலில் எண்ணெயைக் குறைக்கவும் பருவமழை காலங்களில் உடலானது இலகுவான எண்ணெய்களை எளிதில் செரிக்கும். ஆலிவ் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்ற எண்ணெய்கள், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றை விட நல்லதாக இருக்கும். மேலும் இவை உடலுக்கு வெப்பத்தை அளிக்கின்றன.
நிறைய மூலிகை தேநீர் குடிக்கவும் இஞ்சி டீ மற்றும் க்ரீன் டீ போன்ற மூலிகை தேநீரில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளது. அவை தொண்டையை ஆற்றவும், மழை போன்ற வானிலையின் போது தொண்டைக்கு இதமளிக்கவும் பயன்படுகின்றன.
உடற்பயிற்சியை தவிர்க்காதீர் மழை காலத்தின் போது நீங்கள் முற்றிலும் உடற்பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. மழைக்காலங்களில் செய்யப்படும் கடுமையான உடற்பயிற்சிகள், உடலுக்கு அதிக சுமை கொடுப்பதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். எனவே குறைந்த தாக்கம் கொண்ட நீச்சல், யோகா, நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
வெளியே சாப்பிடாதீர்கள் இந்த அறிவுரையை நீங்கள் மில்லியன் முறை கேட்டிருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக உங்கள் உள்ளூர் பேல் பூரி, பானி பூரி போன்றவற்றிற்கு விடை கொடுக்க ஒரு நல்ல யோசனை. ஈரப்பதமான சூழ்நிலையில் விற்கப்படும் இந்த உணவுகள் கிருமிகளை எடுத்துக் கொண்டு அவற்றின் இயற்கையான ஊட்டச்சத்துக்களை இழப்பதால் உடல்நலக் கேடு ஏற்படும்.
உங்கள் உணர்வுகளை சீராக வைத்துக் கொள்ளவும் நமது உடல் நிலையை சீராக வைத்துக் கொள்வதில் நம் உணர்வுகளும் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே இந்த பருவமழையில் எதிர்மறையான உணர்வுகளான (ஆயுர்வேதம் படி சூடான உணர்வுகளை) கோபம், எரிச்சல், பொறாமை மற்றும் ஈகோ போன்றவற்றை ஒரு ஓரமாக வைக்கவும்.