33.9 C
Chennai
Friday, May 23, 2025
hair 05 1467701490
தலைமுடி சிகிச்சை

முடி வளர்ச்சியை அபாரமாக்கும் சூப்பர் மூலிகை எதுவென தெரியுமா?

ஆரோக்கியமான கூந்தல் இருந்தால், நம்மை அழகாக காட்டும். அழகான தோற்றமும் பெறுவோம். சிலருக்கு இயற்கையாகவே செல்கள் தூண்டப்பட்டு கூந்தல் வளர்ச்சி நன்றாக அமையும்.

சிலருக்கு, அது மிகவும் மெதுவாக அமையும் அதற்கு அவர்கள் சாப்பிடும் உணவு, உபயோகப்படுத்தும் ஷாம்பு இதெல்லாம் காரணமாக இருக்கும். இன்னும் சிலருக்கு, செல் வளர்ச்சி மிகவும் குறைந்து முடி வளர்ச்சியே நின்று போயிருக்கும்.

இவர்களுக்கு எப்படி கூந்தல் செல்களின் வளர்ச்சியை தூண்டலாம் என தெரிந்து கொண்டால், முடி மீண்டும் வளர ஆரம்பிக்கும். அப்படி மருதாணி, செம்பருத்தி, நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவை கூந்தல் வளர்ச்சியை தூண்டும்.

அவைகளைப் போலவே மற்றொரு பொருளும் கூந்தல் வளர்ச்சியை தூண்டும். அது என்ன தெரியுமா? கொய்யா இலை.

கொய்யா இலை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. எல்லாவித விட்டமின்களும் உண்டு. ஜீரண சக்தியை மேம்படுத்தும்.இது கூந்தலுக்கும் அற்புதம் செய்யும் என அறிவீர்களா?

கொய்யாவில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. சரும பாதிப்பை ரிப்பேர் செய்கிறது. கூந்தலுக்கு மிளிரும் தன்மையைத் தரும்.

கூந்தல் உதிர்வதை தடுக்க : கை நிறைய கொய்யா இலைகளை எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வையுங்கள். 20 நிமிடங்கள் கழித்து, வடிகட்டி, அந்த நீரில் தலைமுடியை நனையுங்கள்.

குறிப்பாக ஸ்கால்ப்பில் தடவுங்கள். 5 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதனால், முடி உதிர்வதை தடுக்க முடியும்.

பளபளப்பான கூந்தல் வேண்டுமா? கொய்யா இலையை பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆலிவ் எண்ணெய் தேங்காய் எண்ணெயை சம அளவு எடுத்து, அடுப்பில் சூடேற்றுங்கள்.

எண்ணெய் கொதித்ததும், அடுப்பை குறைத்து, கொய்யா இலை பேஸ்ட்டை அதில் போடுங்கள். ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் அதில் செர்க்க வேண்டும். நுரை தணிந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

எண்ணெய் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலை வெயிலில் 10 நிமிடம் பாட்டிலை வைக்க வேண்டும். ஒரு வாரம் கழிந்ததும் எண்ணெயை வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகப்படுத்துங்கள்.

வாரம் மூன்று முறை இந்த எண்ணெயை தலையில் வேர்கால்களில் அழுந்த தேய்த்து, மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு செய்தால், மின்னும் கூந்தல் கிடைக்கும். கூந்தல் மிக மிருதுவாக மாறும். முடி வளர்ச்சியும் அபாரமாக இருக்கும்.

கொய்யா இலை மற்றும் மருதாணி இலை : இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து, தலையில் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலை முடியை அலசலாம். இதனால் முடி அடர்த்தியாய் வளரும். கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கப்பெறும்.
hair 05 1467701490

Related posts

கூந்தல் உதிர்வை தடுக்கும் பழங்களால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்

nathan

உங்க கூந்தல் வளர என்ன செய்யலாம்?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வு, பொடுகு, அடர்த்தியின்மை இதுக்கெல்லாம் சிறந்த தீர்வு தரும் ஒரு பொருள் !!

nathan

அரப்புத்தூள் கூந்தல் மென்மையாக இருக்க உதவும் பயன்படுத்தும் முறை..!

nathan

முடி கொட்டுதா? அப்ப வாழைப்பழத்தோடு இந்த பொருட்களை சேர்த்து தடவுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா கூந்தல் உதிர்வுக்கான காரணமும் – செய்யக்கூடாதவையும்

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் மண்டையில் கொண்டை போடுவது ஏன் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பீர் குடிக்கு மட்டுமல்ல, முடிக்கும் தான்!!!

nathan

தலை அரிப்பை போக்குவது எப்படி போக்குவது எப்படி தெரியுமா?

nathan