24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
aaraa
சைவம்

ஆரஞ்சு பச்சைப் பட்டாணி புலாவ்

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
ஆரஞ்சு சாறு – 2 கப்,
பட்டை, லவங்கம் தலா ஒன்று,
வெங்காயம் – 1,
பச்சைப் பட்டாணி கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
முந்திரி – 6,
நெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை:
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
* பாசுமதி அரிசியை நன்கு கழுவி ஆரஞ்சு சாறு, ஒன்றரை கப் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
* குக்கரில் பட்டை,
லவங்கம், தேவையான உப்பு சேர்த்து, ஊறவைத்த அரிசியை நீருடன் சேர்த்துக் கலந்து மூடி, ஒரு விசில் வந்ததும் அடுப்பை ‘சிம்’மில்
வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
* வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் முந்திரி சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், வேகவைத்த
பச்சைப் பட்டாணி, சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி, வெந்த சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்: உடல் சூட்டைத் தணிக்கும்.aaraa

Related posts

வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

பிரிஞ்சி ரைஸ்

nathan

உருளைக்கிழங்கு கிரிஸ்பி

nathan

தக்காளி பட்டாணி சாதம்

nathan

சூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

அசத்தலான சுவையில் இஞ்சி குழம்பு

nathan

கறிவேப்பிலை மிளகு குழம்பு

nathan

பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ்

nathan