எண்ணெய் சருமம் இருந்தால், கரும்புள்ளி, அழுக்குகள், கிருமி தொற்று என எல்லா சருமப் பிரச்சனைகளும் தலையெடுக்கும். ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒரு பிரச்சனை ஏற்படும். குளிர்காலங்களில், சருமம் ஒருபக்கம் வறண்டும், இன்னொருப்பக்கம் முகப்பருக்கள் கரும்புள்ளிகளின் தொல்லையும் உண்டாகும்.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு குளிர் காலத்தில் ஏன் எண்ணெய் பசை முகத்தில் அதிகமாகிறது என கேள்வி எழலாம். நீர்த் தன்மை குறையும் போது, சருமத்தின் அடியிலுள்ள செபேஷியஸ் சுரப்பி, சருமத்தை வறண்டு போகாமலிருக்க, அதிகப்படியான எண்ணெய் சுரக்கும்.
இதனால் ஒருசேர வறட்சியும் எண்ணெய் சுரப்பினால் முகப்பருக்களும் வந்து சருமத்தை பாதிக்கும்.
இந்த பிரச்சனையை போக்கும் விதமாக இங்கே எளிய குறிப்பு ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உபயோகப்படுத்திப் பாருங்கள்.
எந்த வித பக்க விளைவுகளையும் தராது. என்ணெய் பசையை குறைக்கும். தேவையான அளவு ஈரப்பதம் சருமத்திற்கு தரும். ஆகவே சரும பிரச்சனைகளிலிருந்து உங்களைக் காத்திடலாம்.
தேவையானவை : நாட்டுச் சக்கரை – 304 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் – 3-4 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்.
நாட்டுச் சர்க்கரையுடன் மற்ற பொருட்களை எல்லாம் கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காய விடுங்கள்.
பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரம் 2 முறை செய்தால் போதும். எண்ணெய் பசை குறைந்து , சருமம் பொலிவாக இருக்கும். இறந்த செல்கள் வெளியேறி குளிர் காலத்தில் எந்த வித சரும பிரச்சனையும் உங்களை நெருங்காது.