25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
201610270811557821 How to prevent hemorrhoids occur Constipation SECVPF
மருத்துவ குறிப்பு

மூலநோய் வராமல் தடுப்பது எப்படி?

மூலநோய் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள், உணவு முறைகள் உள்ளன என்பதை கீழே பார்க்கலாம்.

மூலநோய் வராமல் தடுப்பது எப்படி?
நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் ‘மூலநோய்’ (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

மூலநோய் உள்ளவர்கள் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலம் கழிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது. மலம் கழிப்பதற்கு முக்கவும் அவசரப்படவும் கூடாது.

அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், பொட்டுக்கடலை, அவரைக்காய், கொத்தவரங்க்காய், கீரைகள், முழு தானியங்கள், வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம். தினமும் இரண்டு பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காபி. தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, பழச்சாறுகளை அருந்த வேண்டும். தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் தவிர்க்க வேண்டும். உடற்பருமன் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, உடல் பருமனாக உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும். வயிற்றில் தோன்றும் கட்டிகள், புற்றுநோய் போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. இடுப்புக்குழித் தசைகளுக்குப் பயிற்சி தரலாம். இயலாதவர்கள் இதற்கென்றே உள்ள யோகாசனங்களைச் செய்யலாம். இவை எல்லாமே மூலநோய்க்குத் தடை போடும்.201610270811557821 How to prevent hemorrhoids occur Constipation SECVPF

Related posts

ஆடாதொடை மூலிகை பயன்கள்(Adhatoda vasica Nees)

nathan

எச்சரிக்கை! தும்மல் போட்டாலே கருப்பை இறங்குமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கொட்டை கரந்தையின் மருத்துவ குணங்கள்…!

nathan

மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்

nathan

உங்கள் கவனத்துக்கு உங்க உடல்நலம் பற்றி உங்கள் நாக்கு என்ன சொல்கிறது தெரியுமா?

nathan

வாழ்க்கை தத்துவம் சொல்லும் முத்தான மூன்று கதைகள்…

nathan

எல்லாத்தையும் பக்காவா நியாபகம் வச்சுக்க இப்டி பண்லாமே தெரியுமா!

nathan

உங்க கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க ‘இந்த’ உணவுகள் போதுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

தற் கொலை எண்ணங்களை கையாள்வதற்கான சில நடைமுறை வழிகள்!!! உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan