sl3969
சைவம்

காளன்

என்னென்ன தேவை?

வாழைக்காய் -1/2 கப்,
சேனை – 1/2 கப்,
புளிச்ச கெட்டித்தயிர் – 2 கப்,
மிளகு வறுத்து பொடித்தது – 1 டீஸ்பூன்,
வெல்லம் , உப்பு- தேவைக்கு.

அரைக்க…

துருவிய தேங்காய் – 1 கப்,
பச்சை மிளகாய் – 4.

தாளிக்க…

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிது.

எப்படிச் செய்வது?

அடிகனமுள்ள கடாயில் மஞ்சள்பொடி, மிளகுப்பொடி சேர்த்து காய்களை வேக விடவும். புளித்த தயிரில் அரை கப் தண்ணீர் சேர்த்து கடைந்து மோராக்கி, வேக வைத்த காயுடன் சேர்க்கவும். மிதமான தீயில் 30 நிமிடம் வரை அந்தக் கலவையை வைத்து, அடிக்கடி கிளறி விடவும். தயிர் கொதித்து நான்கில் ஒரு பாகம் ஆகும் வரை அடுப்பில் வைக்கவும். நன்றாக வற்றியவுடன் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடவும். உடனடி உபயோகத்துக்கு எனில், தேங்காயுடன் பச்சைமிளகாய் மற்றும் சிறிது தயிர் சேர்த்து விழுதாக அரைத்து கெட்டித் தயிருடன் சேர்க்கவும். சிறிது உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உடனே இறக்கி விடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து நன்கு வெடித்ததும் வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கறிவேப்பிலை தூவி பரிமாறவும். sl3969

Related posts

உருளைக்கிழங்கு பனீர் குருமா

nathan

முருங்கைக்காய் அவியல்

nathan

தந்தூரி மஷ்ரூம்

nathan

பாசிப்பருப்பு வெங்காய தோசை

nathan

தக்காளி முருங்கைக்காய் குழம்பு: பேச்சுலர் ரெசிபி

nathan

மஷ்ரூம் தொக்கு

nathan

சுவையான புதினா புலாவ்

nathan

சத்து நிறைந்த முருங்கைப்பூ உணவு: முருங்கைப்பூ சாதம்

nathan

மோர்க் குழம்பு

nathan