28.9 C
Chennai
Monday, May 20, 2024
201610200808415275 Paneer guava urundai SECVPF
இனிப்பு வகைகள்

சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பன்னீர் பால்கோவா உருண்டை செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.

சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை
தேவையான பொருட்கள் :

பன்னீர்-1 பாக்கெட் (200 கிராம்)
கோவா-100 கிராம்
சர்க்கரை- ½ கப்
தேங்காய் துருவல்-¼ கப்
வெனிலா எசன்ஸ்-½ கப்

செய்முறை :

* தேங்காய் துருவலை லேசாக வெறும் வாணலியில் சூடு செய்துக் கொள்ள வேண்டும்.

* பன்னீரை மிக்சியில் போட்டு பொடித்துக் (துருவியது போல்) கொள்ள வேண்டும்.

* சர்க்கரையை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.

* ஒரே பாத்திரத்தில் தேங்காய் துருவல், பன்னீர் துருவல், கோவா, சர்க்கரை தூள் மற்றும் வெனிலா எசன்ஸ் எல்லாவற்றையும் போட்டு கைப்படாமல் கரண்டியால் நன்கு அழுத்தி கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு கைகளில் லேசாக நெய் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக அழுத்தி பிடித்து வைக்க வேண்டும்.

* சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை ரெடி.

* குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். 201610200808415275 Paneer guava urundai SECVPF

Related posts

தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா

nathan

சத்தான பீட்ருட் ஹல்வா.!!

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் எளிதாக எப்படி செய்வது

nathan

பலம் தரும் பாரம்பர்ய மிட்டாய்!

nathan

வீட்டிலேயே பஞ்சாமிர்தம் செய்து சுவைக்கலாம்…..

sangika

சாக்லெட் மூஸ் (பிரான்ஸ்)

nathan

ரவா லட்டு

nathan

தித்திப்பான மைசூர்பாக்

nathan

ப்ரெட் ஜாமூன் : செய்முறைகளுடன்…!

nathan