34.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
1449562811 3106
சைவம்

தேங்காய் சாதம்

தினமும் பிள்ளைகள் டிபன் பாக்ஸ்சுக்கு என்ன சாப்பாடு தயார் செய்வது என்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு பிரச்சனையாகவே இருக்கிறது.


தேவையான பொருட்கள்:

அரிசி – 1/2 கிலோ, உளுத்தம் பருப்பு – 50 கிராம், கடுகு – 10 கிராம், பச்சை மிளகாய் (அல்லது காய்ந்த மிளகாய்) – 4, தேங்காய் – 1, கடலைப்பருப்பு – 10 கிராம், முந்திரிப்பருப்பு – 20 கிராம், எண்ணெய் – தேவையான அளவு, கறிவேப்பிலை – தேவையான அளவு.

தாயார் செய்து கொள்ள வேண்டியவை:

அரிசியை பக்குவமாக அதாவது உதிரி சாதமாக வடித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறுது நெய் விடு முந்திரியை வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

செய்முறை:

எண்ணெய்யை வாணலியில் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு தாளிக்கவும். பின்னர் துருவிய தேங்காயை பொட்டு வதக்கவும். பிறகு வடித்து வைத்திருக்கும் சாதம், இவற்றுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும் சூடாக பரிமாறலாம்.

மேலே வறுத்த முந்திரியை தூவி, கொஞ்சம் கொத்தமல்லி இலைகளை சேர்க்கலாம். பார்க்க அழகாகவும், சுவை சூப்பராகவும் இருக்கும்.1449562811 3106

Related posts

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

nathan

கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan

மஷ்ரூம் மசாலா

nathan

சாமை அரிசி தேங்காய் சாதம்

nathan

வாழைப்பூ பொடிமாஸ்

nathan

நாண் ரொட்டி!

nathan

ப்ரோக்கோலி பொரியல்

nathan

சிம்பிளான புடலங்காய் பொரியல்

nathan

கொப்பரி பப்பு புளுசு

nathan