1438940982 4132
சிற்றுண்டி வகைகள்

பாசிப்பருப்பு வெஜ் ஊத்தப்பம்

தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு மாவு – ஒரு கப், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு – அரை கப், நறுக்கிய வெங்காயம் – அரை கப், ஏதேனும் ஒரு கீரை (நறுக்கியது) – அரை கப், பச்சைமிளகாய் – 6 (அல்லது காரத்துக்கேற்ப), துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம், கீரை சேர்த்து வதக்கி, கொஞ்சம் உப்பு போட்டுக் கிளறவும். நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, கோதுமை மாவு, கடலை மாவை சேர்த்துக்கிளறி இதனுடன் வதக்கி வைத்த வெஜிடபிள் கலவையை சேர்த்துக் கலக்கவும். பிறகு, உப்பு சரிபார்த்து தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை கரண்டியால் எடுத்து சற்றே மெல்லிய ஊத்தப்பங்களாக ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.1438940982 4132

Related posts

முயன்று பாருங்கள் வெஜ் பீட்சா

nathan

கேழ்வரகு ஸ்டப்டு இட்லி

nathan

நிமிடத்தில் சுவையான நேந்திரம் பழ கறி எப்படி செய்வது?

nathan

பட்டர் கேக்

nathan

சோயா டிக்கி

nathan

இட்லி மாவு போண்டா

nathan

வெந்தய களி

nathan

கோதுமை – கேழ்வரகு உருண்டை

nathan

உருளைகிழங்கு ரெய்தா

nathan