சீப்பு கொண்டு தலையை சீவும் போது கொத்தாக முடி வருகிறதா? அப்படியெனில் உங்கள் தலைமுடி ஆரோக்கியமின்றி உள்ளது என்று அர்த்தம். மேலும் உங்கள் தலைமுடிக்கு போதிய பராமரிப்பு கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையும் அது உணர்த்தும்.
தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் எத்தனையோ வழிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் அவற்றை பின்பற்றியும் இருப்பீர்கள். தலைமுடி உதிர்வதை சாதாரணமாக நினைத்துவிட்டால், பின் உங்கள் தலையில் உள்ள முடியின் அடர்த்தி குறைந்து, அதுவே உங்களது தோற்றத்தை மோசமாக வெளிக்காட்டும்.
எனவே முடி அதிகம் உதிர்வது போல் தோன்றினால், தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களை செய்ய வேண்டும். இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 3 பொருட்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு ஹேர் பேக் போட்டு வந்தால், 2 நாட்களில் உங்கள் தலைமுடி கொட்டுவது குறைந்திருப்பதை நன்கு காணலாம்.
தேங்காய் பால் – 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் – 1
செய்யும் மற்றும் பயன்படுத்தும் முறை: * முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். * பின் அதனை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்கவும். * பின்பு மைல்டு ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு தலைமுடியை அலச வேண்டும். * இந்த முறையை வார இறுதியில் செய்து வந்தால், தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.