கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலமும், குங்குமப்பூவும்

கர்ப்பிணி பெண்களுக்கு சிறிது குங்குமப்பூவினை பாலில் சேர்த்து பருகச் செய்தால் குழந்தை நல்ல நிறமாக பிறக்கும் என்றதொரு நம்பிக்கை உண்டு. எந்த தாய்க்குதான் தன் குழந்தை நல்ல நிறத்தோடு பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஆனால் அப்படி நடக்குமா? இதுவரை விஞ்ஞானபூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை.
முன்னோர்களின் வழிகாட்டு தலாகவே இருந்துள்ளது.
பொதுவில் குங்குமப்பூ சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.
அதிக அளவு குங்குமப்பூ கர்ப்ப காலத்தில் கூடாது.
சிட்டிகை அளவு கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ எடுத்துக் கொள்ளலாம்.
அதிக அளவு என்பது பிரசவ வலியினை அதாவது கர்ப்பப்பை சுருங்கி விரிவதனை உருவாக்கும். அது குறைப் பிரசவத்தில் முடியலாம்.
ஆனால் 2, 3 துண்டுகள் எடுத்துக் கொள்வதில் பிரச்சினை இருக்காது. இருப்பினும் இதனை மருத்துவர் ஆலோசனைபடியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
2, 3 என்ற எண்ணிக்கை அளவில் 50 கிராம் சுடுபாலில் நன்கு இதனை ஊறவைத்து 20 நிமிடங்கள் சென்று இத்துடன் ஒரு கிளாஸ் பால் சேர்த்து சாப்பிட வேண்டும். அநேக இனிப்பு, சூப், சாதம் வகைகளிலும் குங்குமப்பூ சேர்க்கப்படுவதுண்டு.
அதனை அளவோடு சேர்ப்பதே நல்லது.
பிரசவ வலி ஏற்படும்பொழுது குங்குமப்பூ 10 கிராம் அளவு சோம்பு நீருடன் கலந்து கொடுத்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்பதனை வீட்டு வைத்தியமாக நடைமுறையில் வைத்துள்ளனர். கருப்பை சுருங்கி விரியும் தன்மை குங்குமப்பூவிற்கு உண்டு என்ற மருத்துவ குணத்தினை வைத்தே இது பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.Pregnant%20Lady(C)

Related posts

கர்ப்ப கால அழகு!

nathan

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படுமா

nathan

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

nathan

கர்ப்ப கால டிராபோபோலிக் நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்.

nathan

கர்ப்ப காலத்தில் கிரீன் டீ குடிக்கலாமா?

nathan

உங்கள் கவனத்துக்கு பிரசவ காலம் நெருங்கும்போது ஆசனவாயில் எரிச்சல் ஏற்படுவது எதற்கான அறிகுறின்னு தெரியுமா?…

nathan

குழந்தையின் வளர்ச்சி!

nathan

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு…

nathan

இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும்.

nathan