33.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
​பொதுவானவை

சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சி

கருப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கருப்பு உளுந்து, சாமையை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சி
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப் (தோலுடன்)
பூண்டு – 10 பற்கள்
வெந்தயம் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
காய்ச்சிய பால் – ½ லிட்டர்
தண்ணீர் – 5 கப்

செய்முறை :

* உளுத்தம் பருப்பு, சாமையை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

* குக்கரில் உளுத்தம் பருப்பு, சாமையை போட்டு தண்ணீர் 5 கப் ஊற்றி பூண்டு, வெந்தயம், உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து 5 விசில் வைக்கவும்.

* பிரஷர் போனதும் குக்கர் மூடியை திறந்து வெந்த உளுந்து, சாமையுடன் காய்ச்சிய பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.

* சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சி ரெடி!!!!!!!!

Related posts

ரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சி

nathan

சூப்பரான மசாலா தால்

nathan

வெங்காய ரசம்

nathan

எலுமிச்சை ரசம் செய்முறை விளக்கம்

nathan

சுவையான ஸ்நாக்ஸ் கருணைக்கிழங்கு கபாப்

nathan

கிரீன் சில்லி சாஸ்,சமையல் குறிப்புகள்..,

nathan

ஒரிஜினல் சீன முட்டை ரோல்ஸ் / சைனீஸ் எக் ரோல்ஸ்

nathan

சுவையான குஜராத்தி ஸ்டைல் குடைமிளகாய் பொரியல் !

nathan

வாழைக்காய், குடைமிளகாய் வதக்கல்

nathan