உடலுக்கு உறுதியும் மனதுக்கு உற்சாகமும் அளிக்க வீட்டிலேயே சில எளிய பயிற்சிகள் செய்வதன் மூலம், உடலை ஃபிட்டாகவைத்திருக்க முடியும்.
ஜாகிங்:
நின்ற இடத்திலோ அல்லது மைதானத்திலோ கால்களை நன்கு உயர்த்தி, கைகளை அசைத்து, 2 நிமிடத்துக்கு ஓட வேண்டும்.
ஜம்ப்பிங் ஜாக் :
கால்களைச் சேர்த்து நேராக நிற்க வேண்டும். கைகளைப் பக்கவாட்டில் வைத்துக்கொள்ளவும். இப்போது, குதித்தபடி கால்களைச் சற்று அகட்டி, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, பின் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். ஒரு நிமிடம் இப்படிச் செய்ய வேண்டும்.
பலன்கள்: இந்தப் பயிற்சியின்போது, உடல் முழுவதும் செயல்படுகிறது. மூச்சு ஆழமாகிறது.
மலை ஏறுதல் (Mountain climbing)
தரையில் குப்புறப்படுத்து, கைகள், பாதங்கள் மட்டும் தரையில் பதிந்தபடி, உடலை பேலன்ஸ் செய்ய வேண்டும். வலது காலை மடக்கி, இடுப்பு வரை கொண்டுவந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதைச் செய்யும்போது, முதுகு வளையக் கூடாது. பின்னர், இடது காலை மடக்கி, இடுப்பு வரை கொண்டுவர வேண்டும். ஒரு நிலையில் இருந்து, மற்றொரு நிலைக்கு வேகமாக மாற வேண்டும். இப்படி இடைவிடாமல் ஒரு நிமிடம் செய்ய வேண்டும்.
பலன்கள்: முதுகெலும்புத் தசைகள் மற்றும் உடலின் கீழ்ப் பகுதியில் உள்ள தசைகள் முழுவதும் உறுதியாகும்.
Related posts
Click to comment