என்னென்ன தேவை?
தேங்காய்ப்பால் – 2 கப்,
கடலை மாவு – 2 டீஸ்பூன்,
பொடித்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்,
வெள்ளரிக்காய் – 2 டீஸ்பூன்,
தக்காளி – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத் தூள் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
தேங்காய்ப்பால், கடலை மாவு இரண்டையும் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து சீரகம் மற்றும் பச்சை மிளகாய் தாளித்து கரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறவும். 3 நிமிடங்களுக்குப்பிறகு வெள்ளரிக்காய், தக்காளி, பொடித்த வேர்க்கடலை, உப்பு, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து சூப் பரிமாறவும்.