27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
yam
சைவம்

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

தேவையானவை:

சேனைக்கிழங்கு- 200 கிராம்

மிளகாய் வற்றல்- 4

கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு- 2 தேக்கரண்டி

தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி

பெருங்காயம்- 1 மேசைக்கரண்டி

எலுமிச்சம்பழம்- 1

கடுகு, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: முதலில் சேனைக்கிழங்கைத் தோல் சீவி, வாழைக்காய் வறுவலுக்கு நறுக்கும் மாதிரி மெல்லியதாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு நறுக்கிய துண்டுகளைப் போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும். பிறகு சிறிது எண்ணெய்விட்டு வற்றல், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றையும் சிவப்பாக வறுத்துக்கொண்டு மிக்ஸியில் கரகரப்பாக திரித்துக்கொள்ள வேண்டும். வறுத்தெடுத்த சேனைக்கிழங்கு துண்டுகளையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாகத் திரித்துக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாகச் சிவப்பாக வறுக்கப்பட்டவுடன் திரித்த கிழங்கை போட்டு வதக்கி, திரித்த பொடி, உப்பு, தேங்காய் துருவல் போட்டு நன்றாக புரட்டி இறக்கிவைத்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.

வெள்ளை முள்ளங்கி பச்சடி

தேவையானவை:
வெள்ளை முள்ளங்கி- 2

புளி- 1 பெரிய எலுமிச்சை அளவு

வெங்காயம்- 1

பச்சை மிளகாய்- 3

வெல்லம்- 1 அச்சு

கடுகு – 1 ஸ்பூன்

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

புளியை தண்ணீர்விட்டு ஊறவைக்க வேண்டும். முள்ளங்கியை அரைக்க வேண்டும். புளியைக் கரைத்து, வெல்லம், உப்பு சேர்க்க வேண்டும். முள்ளங்கி விழுதையும் அதனுடன் சேர்க்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி, முள்ளங்கி கரைசலைக் கலந்து கிளறி கீழே இறக்க வேண்டும்.yam

Related posts

கறிவேப்பிலை மிளகு குழம்பு

nathan

உருளைக்கிழங்கு புலாவ்

nathan

பேபி கார்ன் கிரேவி

nathan

பனீர் 65 | Paneer 65

nathan

பட்டாணி புலாவ்

nathan

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி

nathan

காலிபிளவர் பொரியல்

nathan

மணக்கும் ஓமம் சாதம்

nathan

உருளைக்கிழங்கு பனீர் குருமா

nathan