25.9 C
Chennai
Thursday, Mar 12, 2026
201609300949597963 snacks seepu seedai SECVPF
சிற்றுண்டி வகைகள்

ஸ்நாக்ஸ்: சீப்பு சீடை செய்வது எப்படி

வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்ய நினைத்தால், சீப்பு சீடை செய்யுங்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஸ்நாக்ஸ்: சீப்பு சீடை செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப்
உளுத்தம் மாவு – 1/4 கப்
கடலை மாவு – 1/4 கப்
கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
சுடுநீர் – தேவையான அளவு

செய்முறை:

* ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் நன்றாக பிசைய வேண்டும்.

* பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.

* பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சீப்பு சீடை ரெடி!!!201609300949597963 snacks seepu seedai SECVPF

Related posts

ராகி கொழுக்கட்டை

nathan

சோளம் – தட்ட கொட்டை சுண்டல்

nathan

ஸ்பிரிங் ரோல்ஸ் / Spring Rolls

nathan

நவராத்திரி ஸ்பெஷல்- தேங்காய் போளி எப்படி செய்யலாம்?

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃப்ரைடு சிக்கன் மொமோஸ்

nathan

கேழ்வரகு புட்டு

nathan

ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan

சோள தயிர் வடை /கார்ன் தஹி வடா

nathan

பேபி கார்ன் புலாவ்

nathan