என்னென்ன தேவை ?
காளான் (நறுக்கியது) – 1 கப்,
பிளெயின் நூடுல்ஸ் அல்லது சேமியா – 1 கப்,
கேரட், பீன்ஸ், பீட்ரூட் சதுரமாக வெட்டியது – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு,
புளிச்சாறு – தேவைக்கு.
அரைக்க…
இஞ்சி – 1/2 அங்குலத் துண்டு,
பூண்டு – 4,
பச்சை மிளகாய் – 4,
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
நீரில் நறுக்கிய காய்கறிகள், காளான், உப்பு சேர்த்து புளிநீர் ஊற்றி வேக விடவும். காய்கள் வெந்ததும் அந்த காயை வடிகட்டி நீரை எடுத்துக் கொள்ளவும். இந்த நீரில் நூடுல்ஸ் அல்லது சேமியா வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுது சேர்த்து வதக்கி சோயாசாஸ், வெந்த காய்கறி கலவை, வெந்த சேமியா அல்லது நூடுல்ஸ் போட்டு குறைந்த தணலில் கிளறவும். கடைசியாக மிளகுத்தூள் தூவி இறக்கவும். வித்தியாச சுவையுடன் காளான் நூடுல்ஸ் ரெடி.