30.1 C
Chennai
Monday, Jul 28, 2025
08 1433760368 rajmaandpaneerrecipe
சைவம்

பன்னீர் ராஜ்மா மசாலா

இரவில் சப்பாத்தி செய்து சாப்பிடப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியவில்லையா? உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் பன்னீர் மற்றும் ராஜ்மா கொண்டு மசாலா செய்து சுவைத்துப் பாருங்கள்.

மேலும் இந்த மசாலாவை பேச்சுலர்களும் செய்து சுவைக்கலாம். அந்த அளவில் இது எளிமையான செய்முறையைக் கொண்டது. சரி, இப்போது பன்னீர் ராஜ்மா மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: ராஜ்மா – 1 1/2 கப் பன்னீர் – 150 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்) வெங்காயம் – 2 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் ராஜ்மாவை குக்கரில் போட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 2-3 விசில் விட்டு இறக்கி, நீரை வடித்து ராஜ்மாவையும், நீரையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் தக்காளி விழுதை சேர்த்து கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி தீயை குறைத்து, எண்ணெயும் மசாலாவும் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கவும். அடுத்து அதில் பன்னீரை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்த ராஜ்மா நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கரம் மசாலா மற்றும் வேக வைத்துள்ள ராஜ்மா சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கினால், பன்னீர் ராஜ்மா மசாலா ரெடி!!!

08 1433760368 rajmaandpaneerrecipe

Related posts

காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

nathan

வீட்டில் எளியமுறையில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ்

nathan

மஷ்ரூம் ரைஸ்

nathan

பாலக் கிச்சடி

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan

கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

உருளைக்கிழங்கு பனீர் குருமா

nathan

சூப்பரான சென்னை ஸ்பெஷல் வடகறி செய்வது எப்படி ?

nathan

கற்கண்டு பொங்கல் செய்ய வேண்டுமா…

nathan