36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
உடல் பயிற்சி

நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்

இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.

நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்
செய்முறை :

விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக்கொள்ளவும். இது ஆரம்பநிலை. ஆழமாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். சுவாசத்தை உள்ளடக்கி, இரு கால் மற்றும் கைகளைத் தரையில் இருந்து 15 செ.மீ. மேலே தூக்கவும். அதே நேரம் கழுத்து மற்றும் தோள்பட்டையை உயர்த்தி கால் விரல்களைப் பார்க்கவும்.

புட்டப்பகுதியில் உடலை சமநிலைப்படுத்தி நிற்பது இறுதிநிலை. உடல் ஒரு படகு போல இருப்பதால் இதற்கு நெளகாசனம் என்று பெயர்.

10 விநாடிகள் இறுதி நிலையில் நின்று பின் மெதுவாக சுவாசத்தை வெளியேற்றி ஆரம்பநிலைக்கு வரவும். 3 – 5 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.

பயன்கள் :

இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.
டென்ஷனை குறைத்து ஓய்வளிக்கிறது. காலை எழுந்தவுடன் செய்தால் சோம்பல் நீங்கி உடனடி புத்துணர்வு கிடைக்கும்.
வயிற்றுத் தசைகளை இறுக்கம் அடையச் செய்வதனால் எடை குறைய உதவுகிறது

இந்த ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதால் உடலளவில் மட்டுமல்ல… மன அளவிலும் பல நன்மைகள் உண்டு. ஆழ்மன அச்சத்தை உடைத்து நமது ஆளுமைத்திறனை மேம்படுத்துகிறது. வயிற்றுப்பகுதியில் ஆரோக்கியமான அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ஜீரண மற்றும் இனப்பெருக்க மண்டல உறுப்புகள் அனைத்தையும் சீராக இயங்கச் செய்கிறது.

Related posts

நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதனால் கிடைக்கும் நன்மைகள்

nathan

பெண்களுக்கு ஒருமணி நேர உடற்பயிற்சியே போதுமானது

nathan

டம்பெல் தூக்குவது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். …..

sangika

ஃபிட்டான வயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி

nathan

தொடை பகுதியை வலுவாக்கும் 2 பயிற்சிகள்

nathan

பின் தொடையை குறைக்கும் வார்ம் அப்

nathan

வாய்வு தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

sangika

உடல் எடையை குறைக்கும் வெண்பூசணிக்காய் சாறு

nathan

பெண்களில் பலர் 30 வயது தொடுவதற்குள் வயிற்றில் ஏகப்பட்ட மடிப்புகள் விழுந்து சதைகள்

nathan