மருத்துவ குறிப்பு

இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் செய்ய கூடியவை… செய்ய கூடாதவை

உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு இரத்த அழுத்தம் என்று பெயர். 90 சதவீதம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவார்களுக்கு ஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், இரத்தம் சிறுநீரகத்துக்குக் குறைவாகச் செல்லுதல், இருதய தமணி சுருங்குதல், கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல் வேண்டாத தீய பழக்கங்கள் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழுத்தம் கூடலாம். அதிகமாக உப்பு உட்கொள்வதால் அதிகமான உப்பு இரத்தத்தில் கலக்கிறது. இதனால் இரத்தம் அதன் அடர்த்தி நிலையைக் குறைக்க உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக்கொண்டு சிறுநீரகம் மூலமாக அதை வெளியே தள்ள முனைகிறது. இதனால் இரத்த அழுத்தம் கூடுகிறது.

உணவுக் கட்டுப்பாடு:

வயிறு புடைக்க உண்பதைத் தவிர்த்து எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும். முதலில் உண்ட உணவு செரித்த பிறகு அடுத்த வேளை உணவு அருந்துவது நல்லது, நீண்ட பட்டினி கிடப்பதும் இரத்த அழுத்தத்திற்கு காரணமாக அமையும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மாமிச கொழுப்பு வகைகளை அறவே நீக்க வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், காபி, டீ, அதிக உப்பு, அசைவ உணவுகள், பருப்பு வகைகள் வாயுவைப் பெருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். தொடர் சிற்றின்பத்தில் ஈடுபடுவதும், எந்நேரமும் காம சிந்தனையுடன் இருப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், தீரா சிந்தனை, போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மது அருந்துதல் கூடாது.

எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்:

உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். சிற்றுண்டியாக இருத்தல் நல்லது. உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். உணவு அருந்திய உடனே தூங்கச் செல்லக்கூடாது. பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கண்விழித்திருப்பது தவறு. இரத்த அழுத்தத்தை தடுக்க உடலுக்கும், மனதிற்கும் போதிய பயிற்சி தேவை. இவை இரண்டும் சீராக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் வராமல் தடுக்கும்.

Related posts

வெண்மையான பற்களை பெற சுலபமான 5 வீட்டு வைத்தியம்

nathan

புதிய தாய்களுக்கான டிப்ஸ்! பச்சிளங்குழந்தையை பராமரிப்பது எப்படி?

nathan

மரிக்கொழுந்தை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் கிடைக்கும் நன்மை தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

காபி குடித்தால் மலச்சிக்கல் ஏற்படுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… புருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா? அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…

nathan

நீங்கள் குறட்டையால் சிக்கி தவிப்பவராக ?அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு மண்ணீரல் நோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில முக்கிய அறிகுறிகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…தொப்பை மற்றும் எடையை வேகமாக குறைக்க இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க…

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! உடம்பில் உண்டாகும் கொழுப்பு கட்டியை எளிதில் கரைக்க வேண்டுமா?

nathan