31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

சத்தான வெங்காய – மிளகு சாதம் செய்வது எப்படி

சின்ன வெங்காயம் உடலுக்கும் மிகவும் நல்லது. வெங்காய சாதம் செய்வது மிகவும் சுலபம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சத்தான வெங்காய – மிளகு சாதம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சாதம் – ஒரு கப் (உதிரியாக வடித்தது)
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – ஒன்று
மிளகுதூள் – தேவைக்கு
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு

தாளிக்க :

கடுகு, கறிவேப்பிலை, சீரகம், கடலைப்பருப்பு, வேர்க்கடலை.

செய்முறை :

* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், கடலைப்பருப்பு, வேர்க்கடலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* இதில் சிறிது உப்பு (வெங்காயத்துக்கு மட்டும்), கரம் மசாலா, மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.

* பச்சை வாசம் போக வதங்கியதும் வடித்த சாதம் கலந்து அழுத்தி மிதமான தீயில் 5 நிமிடம் மூடி வைக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சுவையான வெங்காய – மிளகு சாதம் தயார்.

Related posts

நெல்லிக்காய் சாதம்

nathan

பேச்சுலர் சாம்பார்

nathan

பட்டாணி பன்னீர் கிரேவி

nathan

ஐந்து இலை குழம்பு அடடா, என்ன ருசி!

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கடாய் பன்னீர்

nathan

உருளைக்கிழங்கு மொச்சை வறுவல்

nathan

அப்பளக் கறி

nathan

சென்னா பன்னீர் கிரேவி

nathan

சத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி

nathan