28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201609121314280737 Beetroot will solve men libido problems SECVPF
மருத்துவ குறிப்பு

ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ரூட்

இப்போது பீட்ரூட் எப்படி ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை சரிசெய்கிறது என்று பார்ப்போம்.

ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ரூட்
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் அதிக அளவில் பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். எனவே இதற்கு ஓர் இயற்கை வழியைக் கண்டுபிடிக்கும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டை சோதித்தனர். அதில் பீட்ரூட்டை ஆண்கள் சாப்பிடுவதால், பாலியல் பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு இணையாக பீட்ரூட் செயல்படுவது தெரிய வந்துள்ளது.

பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. எனவே பாலுணர்ச்சி குறைவாக இருந்தாலோ அல்லது விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட்டாலோ, அதனை சரிசெய்ய பீட்ரூட்டை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். சரி, இப்போது பீட்ரூட் எப்படி ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை சரிசெய்கிறது என்று பார்ப்போம்.

பீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது. பீட்ரூட்டை நன்கு மென்று விழுங்கும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த நாளங்களை விரியச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

ஆண்கள் தொடர்ந்து பீட்ரூட் சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் முழுவதும், குறிப்பாக பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்கள் விரிந்து, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாலியல் பிரச்சனைகள் நீங்கி, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.

ஒருவர் தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனால் இப்பிரச்சனையை பீட்ரூட் குறைப்பதால், ஆண்கள் தினமும் பீட்ரூட் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, பாலியல் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட முடியும்.

உங்களுக்கு பச்சையாக பீட்ரூட்டை சாப்பிட பிடிக்காவிட்டால், அதனை துண்டுகளாக்கி, வேக வைத்து, பின் அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து உட்கொண்டு வர, உடலில் நைட்ரேட்டுகளின் அளவு அதிகரிப்பதோடு, இரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்.

பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பாக இருப்பதால், இதனை ஜூஸ் செய்து குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பீட்ரூட் ஜூஸ் செய்வதற்கு 2 சிறிய பீட்ரூட்டை எடுத்து, நன்கு கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும். 201609121314280737 Beetroot will solve men libido problems SECVPF

Related posts

வீட்டில் உள்ள தரை பளிச்சிட !

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பிரண்டையின் மருத்துவப் பயன்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா காய்ச்சல் இருக்கும்போது செய்யக்கூடாதவை என்ன தெரியுமா….?

nathan

ஆண்களிடம் பெண்கள் முதலில் இதை தான் பார்ப்பார்களாம்!

nathan

பெண்கள் தாம்பத்தியத்திற்கு மெனோபாஸ் முற்றுப்புள்ளியா?

nathan

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.!

nathan

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா?தெரிந்துகொள்வோமா?

nathan

அலுவலகப் பணியும் குடும்பப் பொறுப்பும் இரண்டையும் எப்படி சமாளிப்பது?

nathan

பெண் தனது கடந்த கால காதலை கணவரிடம் சொல்லலாமா?

nathan