29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
அசைவ வகைகள்

முட்டை குழம்பு

தேவையான பொருள்கள்
முட்டை – 5
தக்காளிப் பழம் – 4 (2 cup)
பெரிய வெங்காயம் – 2 (1 cup)
பச்சை மிளகாய் – 3
மல்லி, புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் – 1 tea spoon
மிளகாய் தூள் – 1 tea spoon
மல்லி தூள் (தனியா) – 3 table spoon
மிளகு தூள் – 2 tea spoon
கறி மசால் தூள் – 2 tea spoon
சோம்பு தூள் – 2 tea ஸ்பூன்
எண்ணெய் – 30ml

செய்முறை
மூன்று முட்டைகளை வேக வைத்து கூட்டை நீக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மல்லி, புதினா இலையை காம்பு நீக்கி சிறிதாக அரிந்து கொள்ளவும்.

எண்ணையை காய வைத்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும். இத்துடன் மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும். மஞ்சள், மிளகாய், தனியா தூள், கறி மசால் கலந்து கிளறவும். சற்று வெந்தவுடன், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். தண்ணீர் சூடானவுடன் இரண்டு முட்டைகளை மெதுவாக உடைத்து ஊற்றவும். மிதமான சூட்டில் இன்னும் சிறிது நேரம் உடைத்த முட்டை கட்டியாகும் வரை சூடக்கிவிட்டு, பின்பு வேக வாய்த்த முட்டைகளை இரண்டாக நறுக்கி சேர்க்கவும். இப்போது சூட்டை கூட்டி வைக்கலாம். தண்ணீர் வற்றியதும், சோம்பு, மிளகு தூள் சேர்க்கவும். மல்லி, புதினா இலை தூவி இறக்கவும்.

Related posts

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய தெரியுமா….?

nathan

காலிஃப்ளவர் முட்டை பொரியல்

nathan

சுவையான கொங்குநாடு கோழி குழம்பு

nathan

சில்லி சிக்கன் கிரேவி

nathan

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan

செட்டிநாடு மட்டன் கிரேவி செய்வது எப்படி?

nathan

அரைத்துவிட்ட மீன் குழம்பு|Arachu vacha meen kulambu

nathan

எப்படி சுறா புட்டு செய்வது?

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ்

nathan