ridge gourd egg poriyal 07 1449475159
அசைவ வகைகள்

பீர்க்கங்காய் முட்டை பொரியல்

இதுவரை முட்டை பொரியலில் வெறும் வெங்காயம், தக்காளியை மட்டும் சேர்த்து தான் பொரியல் செய்திருப்பீர்கள். ஆனால் அதோடு ஏதேனும் காய்கறிகளை சேர்த்து பொரியல் செய்ததுண்டா? ஆம், முட்டை பொரியலில் பீர்க்கங்காயை சேர்த்து செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். மேலும் ஆரோக்கியமானதும் கூட.

இங்கு அந்த பீர்க்கங்காய் முட்டை பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பீர்க்கங்காய் – 1 (தோலுரித்து நறுக்கியது) முட்டை – 4 எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – 1 கையளவு

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மசாலா பொடிகளைத் தூவி, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, மூடி வைத்து 8 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். பீர்க்கங்காய் நன்கு வெந்ததும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், பீர்க்கங்காய் முட்டை பொரியல் ரெடி!!!

ridge gourd egg poriyal 07 1449475159

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குக்கரில் சிக்கன் பிரியாணி குழையாமல் செய்வது எப்படி

nathan

சில்லி மீல் மேக்கர்

nathan

உருளைக்கிழங்கு முட்டைக்கறி

nathan

செட்டிநாடு சிக்கன் கறி

nathan

மட்டன் கபாப் : செய்முறைகளுடன்…!​

nathan

இறால் பஜ்ஜி

nathan

சைனீஸ் இறால் ப்ரைட் ரைஸ்,tamil samayal kurippu,tamil samayal tips

nathan

இறால் மக்ரோனி : செய்முறைகளுடன்…!

nathan

இறால் கறி

nathan