33.7 C
Chennai
Sunday, Jul 27, 2025
broccoli kabab recipe 03 1449142722
சிற்றுண்டி வகைகள்

ப்ராக்கோலி கபாப்

மாலையில் குழந்தைகளின் பசியை ஆரோக்கியமான ஓர் ரெசிபியைக் கொண்டு போக்க நினைத்தால், மிகவும் ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருளான ப்ராக்கோலியைக் கொண்டு கபாப் செய்து கொடுக்கலாம். மேலும் இது மிகவும் அற்புதமான மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியான ஓர் ஸ்நாக்ஸ்.

இங்கு அந்த ப்ராக்கோலி கபாப் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்: ப்ராக்கோலி – 3 கப் சீஸ் – 1 கப் (துருவியது) உப்பு – தேவையான அளவு மிளகுத் தூள் – தேவையான அளவு முட்டை – 2 பிரட் தூள் – 1 கப் எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, பின் அதில் ப்ராக்கோலியை சேர்த்து 3 நிமிடம் வேக வைத்து, பின் நீரை வடிகட்டி ப்ராக்கோலியைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் ப்ராக்கோலியைப் போட்டு, அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, சீஸ், மிளகுத் தூள், பிரட் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து ஓரளவு தட்டையாக தட்டிப் போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்தையும் பொரித்து எடுத்தால், ப்ராக்கோலி கபாப் ரெடி!!!

broccoli kabab recipe 03 1449142722

Related posts

கம்பு கொழுக்கட்டை

nathan

Super சிக்கன் வடை : செய்முறைகளுடன்…!

nathan

சுவை மிகுந்த கோஸ் வடை

nathan

சீனி வடை

nathan

ராஜ்மா அடை

nathan

கேழ்வரகு உளுந்து தோசை

nathan

சூப்பரான சிக்கன் – உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

காராமணி தட்டை கொழுக்கட்டை

nathan

காலை உணவிற்கு உகந்த கேழ்வரகு – கேரட் ரொட்டி

nathan