27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
201609071421412893 Evening Snacks bread bajji SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பஜ்ஜி

வெங்காயம், வாழைக்காய், மிளகாய் பஜ்ஜியை போல் பிரெட் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பஜ்ஜி
தேவையான பொருட்கள் :

கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – ¼ கப்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – ½ தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – ¾ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
பிரட் துண்டுகள் – 5
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும்.

* பின் சமையல் சோடா ஒரு சிட்டிகை சேர்த்து மாவை நன்றாக கிளறி வைக்கவும்.

* பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பிரட் துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.201609071421412893 Evening Snacks bread bajji SECVPF

Related posts

சத்தான புதினா – கேழ்வரகு தோசை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு மசாலா போளி

nathan

பிரண்டை சப்பாத்தி

nathan

பிரெட் பஜ்ஜி செய்ய வேண்டுமா…?

nathan

ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்

nathan

தேங்காய்-ரவா புட்டு

nathan

பொங்கல் ஸ்பெஷல்: காரைக்குடி சாமை பொங்கல்

nathan

சோளம் – தட்ட கொட்டை சுண்டல்

nathan

பண்டிகை காலத்தில் கண்டிப்பாக இடம்பெறும் வடை, பாயசம்…

nathan