29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி

மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இந்த சிக்கன் ஸ்டஃப் ரோல் சாப்பிட சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 100 கிராம்
முட்டை – 2
கொத்திய எலும்பு நீக்கிய கறி – 100 கிராம்
சோயா சாஸ் – 1/4 ஸ்பூன்
அஜினோமோடா – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* கோதுமை மாவில் முட்டை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவுக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

* கடாயில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கன் கொத்தகறியை போட்டு பாதியளவு வெந்ததும் அதில் அஜினோ மோடா, சோயா சாஸ், உப்பு சேர்த்து கலந்து ஆறவைக்கவும்.

* மாவை சப்பாத்திகளாக உருட்டி சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

* ஒவ்வொரு சப்பாத்தி சதுரத்தின் மீதும் கொஞ்சம் கோழிக்கறி கலவையை வைத்து நீளவடிவில் உருட்டி வைக்கவும். அனைத்தையும் இவ்வாறு செய்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள சிக்கன் ஸ்டஃப் ரோல்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் ரெடி.

Related posts

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா

nathan

காளான் கபாப்

nathan

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் அண்ட் சால்ட் பிஸ்கட்!…

sangika

காராமணி கொழுக்கட்டை

nathan

அகத்திக்கீரை சொதி

nathan

பன்னீர் – பச்சை பட்டாணி கட்லெட்

nathan

சத்து நிறைந்த கேரட் – முந்திரி அடை

nathan

ஸ்டீம்டு அண்ட் ஃப்ரைடு மணி பேக்

nathan