தேவையான பொருட்கள்:
சிக்கனுக்கு தேவையானவை:
பெரிய சிக்கன் துண்டுகள் – 7
உள்ளி – ஒன்று
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
தந்தூரி மசாலாத்தூள் – ஒரு மேசைக்கரண்டி
கறி மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மயோனைஸ் – ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கறி சரக்குத் தூள் – ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
மரக்கறிக்கு தேவையானவை:
காரட் – 2
கத்தரிக்காய் – ஒன்று
வெங்காயம் – ஒன்று (பெரியது)
உருளைக்கிழங்கு – 2
பீன்ஸ் – சிறிது
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை :
சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்து கத்தியால் சிறு கீறல்கள் போட்டுக் கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் பூண்டுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை போட்டு அதனுடன் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிக்கனுக்கு தேவையானவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
மசாலா தூள்கள் சேர்த்து பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை ஃப்ரிட்ஜில் வைத்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
காய்கறிகளை தோல் சீவி விட்டு கழுவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வட்டமாகவோ அல்லது நீள துண்டுகளாகவோ நறுக்கவும். பீன்ஸை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
கத்திரிக்காய் மற்றும் காரட்டை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கவும். விருப்பட்டால் ஏதேனும் வேறு காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
2 மணி நேரம் கழித்து சிக்கன் நன்கு ஊறியதும் பேக்கிங் தட்டில் அடுக்கி அவனில் வைத்து பேக் செய்யவும்.
சிக்கன் துண்டுகளை வைத்திருந்த பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு தேவையான அளவு உப்பு, கறி மசாலா தூள், எண்ணெய் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும்.
சிக்கனை அவனில் வைத்து 10 – 15 நிமிடம் கழித்து காய்கறிகளையும் அதனுடன் சேர்த்து சிக்கன் மற்றும் காய்கறிகள் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.