1.முல்தானிமட்டி ,சந்தனம், ரோஸ் வாட்டர், முட்டையின் வெள்ளைக்கரு, எலும்பிச்சை சாறு கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வந்தால், முகம் அழகாக இருக்கும்.
2.பச்சை உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால் வெயிலால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
3.முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவவும்.
4.கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவினால், முகம் மிருதுவாகும்.
5.உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.