33.8 C
Chennai
Sunday, Jun 16, 2024
201607291042295719 how to happy your wife SECVPF
மருத்துவ குறிப்பு

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?

உங்கள் மீது அக்கறை காட்டும் மனைவிக்காக சில விஷயங்களை நீங்கள் செய்தால் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?
நாள் முழுவதும் வீட்டு வேலை, கணவர், குழந்தைகளை கவனிப்பது என்று இருக்கும் மனைவிக்கு சில விஷயங்களை கணவன் செய்யும் போது மனைவி சந்தோஷப்படுவார்கள். அவை என்னவென்று பாருங்கள்.

* காலையில் மனைவி எழும் முன் எழுந்து சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டையை ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.

* பெட் மேலே துவைத்த துணி, பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுங்க.

* மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டுவைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.

* ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..

* அடுப்படி சாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் ஏதாவது!!

* ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!

* எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் ட்ரில் எடுங்க.

* வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க. நீங்க முதன்முதலாக பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.

* ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள், பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளணும்.

* மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தால் வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..

* மனைவியைப் பற்றியோ உங்கள் கல்யாணத்தையோ வைத்து பிறர் முன்னிலையில் காமெடி பண்ணிவிடாதீர்கள்.

* மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். 201607291042295719 how to happy your wife SECVPF

Related posts

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்தல், உடல் பருமன், தூக்கமின்மை அதிகரிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணம்னு

nathan

இதயம் வேகமாக துடிப்பதால் பிரச்சனை ஏற்படுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பித்தப்பை கற்களுக்குத் தீர்வு

nathan

வெந்தய நீர் Vs எலுமிச்சை நீர் … இதில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?

nathan

சொரியாசிஸ் – தவிர்க்க வேண்டியவை

nathan

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்

nathan

சத்தான சைடு டிஷ் சன்னா பாலக்

nathan

செரிமான கோளாறுகளை சரிசெய்யும் அன்னாசிப் பூ

nathan

இந்த எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

nathan