26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
sl3759
​பொதுவானவை

சென்னா மசாலா

என்னென்ன தேவை?

வெள்ளைக் கொண்டைக்கடலை – 3/4 கப்,
உப்பு – தேவைக்கு,
தக்காளி – 2,
துருவிய செளசெள – 1/2 கப்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
வெல்லம் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
அரிந்த மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கொண்டைக் கடலையை 8 மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு செளசௌ துருவலை வதக்கி எடுத்துக் கொள்ளவும். தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள் இவற்றுடன் வதக்கிய செளசௌ துருவலையும் சேர்த்து அரைக்கவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த விழுதினை வதக்கி, மஞ்சள்தூள், வெந்த கடலை, கரம் மசாலா, வெல்லம் சேர்த்து எல்லாமாக கொதி வந்ததும் மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.sl3759

Related posts

திருமணமான பெண்களுக்கு அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட காரணம்

nathan

நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்

nathan

தவா பன்னீர் மசாலா

nathan

சீஸ் பை

nathan

இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்…!

nathan

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்

nathan

சுவையான ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் செய்வது எப்படி?

nathan

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

nathan

ஆக்கப்பூர்வமானதாக மாற்றுங்கள்

nathan