201607261328053286 girls Going alone to the attention SECVPF
மருத்துவ குறிப்பு

தனியாக வெளியூர் செல்லும் பெண்களின் கவனத்திற்கு

பெண்கள் தனியாக வெளியூர் பயணம் செய்யும் போது மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும்.

தனியாக வெளியூர் செல்லும் பெண்களின் கவனத்திற்கு
பெண்கள் வெளியூர்களுக்கு தனியாக பயணம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போதுள்ள காலகட்டத்தில் எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் பெண்களுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன.

வெளியூர் செல்லும் இடங்களில் பெண்களின் உடமைகளுக்கும், உயிருக்கும் பல ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் வெளியூர் செல்லும் போது மிகவும் கவனமாகவும், பாதுகாப்புடன் செல்ல வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

* ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

* வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக இரவு பயணத்தை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

* வெளியூர் பயணத்தில் போது தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும்.

* செல்போன், ஏடிஎம் கார்டு, பணம் இவற்றை கைப்பையில் வைக்காமல் தங்களின் மறைவிடங்களில் வைத்துக் கொள்ளவும்.

* ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின் எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ள மறவாதீர்கள். மேலும் அந்த நபர் சந்தேகப்படும் வகையில் இருந்தால் அந்த வாகனத்தில் ஏறுவதை தவிர்த்து விடுவது நல்லது.

* அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். அறிமுகமற்றவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை.

* தைரியம் உள்ள பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் போன்றவற்றைத் தங்கள் கைவசம் வைத்துக் கொள்ளவும். (இது தைரியமான பெண்களுக்கு மட்டும் தான்).201607261328053286 girls Going alone to the attention SECVPF

Related posts

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருதா? அப்ப இத படிங்க!

nathan

கணவன் – மனைவி இடையே அன்பே பிரதானம்

nathan

அறுசுவையும் அதன் மருத்துவ குணங்களும்

nathan

வெங்காயம் – பாதம் வைத்தியம்…!

nathan

கருவுற்ற தாய்மார்களுக்கான பயிற்சி வகுப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மோசமான 5 உணவு பழக்கம் எலும்புகளுக்கு ஆபத்து

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலையின் சில முக்கிய நன்மைகள்!!!

nathan

கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் தரும் அட்வைஸ்

nathan

இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி

nathan