31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

லோபியா (காராமணி கறி)

என்னென்ன தேவை?

வெள்ளை காராமணி – 1 கப்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
(வெங்காயம் – 1,
தக்காளி – 1,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு பல் – 4,
மல்லித்தழை – சிறிது அனைத்தையும் பொடியாக நறுக்கவும்),
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காராமணியை லேசாக வறுத்து 2 மணி நேரம் ஊற வைத்து சுத்தப்படுத்தி வைக்கவும். பின் குக்கரை காய வைத்து நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, இத்துடன் பொடித்த பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் வதக்கி அது வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கியபின் ஊறிய காராமணி சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு 2 முதல் 3 விசில் வந்ததும் இறக்க வேண்டும். அதன்மேல் 1 டீஸ்பூன் நெய், மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இந்த கிரேவியை ரொட்டி, நாண், புல்காவுடன் பரிமாறலாம்.

Related posts

கத்தரிக்காய் பொரியல் கறி

nathan

கத்தரிக்காய் மசாலா

nathan

தக்காளி சீஸ் ரைஸ்

nathan

காராமணிப் பொரியல் செய்வது எப்படி

nathan

சத்தான பட்டர் பீன்ஸ் – கேரட் பொரியல்

nathan

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

nathan

மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வாழைத்தண்டு கூட்டு

nathan

கொத்தவரங்காய் பொரியல்

nathan

கடலை கறி,

nathan